ஐந்து அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதுவர் ஒருவரை நியமிப்பதற்குப் பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அங்கீகாரம் |
திகதி : | 2022-08-15 |
ஐந்து அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டுத் தூதுவரை நியமிப்பதற்கு அண்மையில் (12) கூடிய உயர் பதவிகள் பற்றிய குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி, இந்தோனேசியாவுக்கான இலங்கைத் தூதுவராக அட்மிரல் (பேராசிரியர்) ஜயநாத் கொலம்பகேவை நியமிப்பதற்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியது.
அதேநேரம், விவசாய அமைச்சின் செயலாளராக எம்.பி.ஆர். புஷ்பகுமாரவின் நியமனத்திற்கும், வனவிலங்குகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக திருமதி ஆர்.எம்.சி.எம் ஹேரத்தின் நியமனத்துக்கும் நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் செயலாளராக எம்.கே.எம்.சிறிவர்தனவின் நியமனத்துக்கும் உயர் உதவிகள் பற்றிய குழு அனுமதி கிடைத்துள்ளது.
அதுமட்டுமின்றி, சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக திரு. எஸ்.ஜே.எஸ்.சந்திரகுப்த, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளராக ஆர்.பி.ஏ.விமலவீர ஆகியோரின் நியமனத்திற்கும் உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுக் கூட்டத்தில், அமைச்சர்களான கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, கௌரவ டக்ளஸ் தேவானந்தா, கௌரவ விதுர விக்கிரமநாயக்க, கௌரவ நிமல் சிறிபால டி சில்வா, கௌரவ ரமேஷ் பத்திரன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ தலதா அத்துகோரள, கௌரவ (வைத்தியகலாநிதி) சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே மற்றும் கௌரவ ஜோன் செனவிரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






