இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

அரச ஊழியர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள மற்றொரு சேவைநிலையத்தில் பணிக்கமர்த்தப்படும்போது கர்ப்பிணி அரச ஊழியர்கள் தொடர்பில் சிறப்பு கவனம் செலுத்துங்கள் - பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் கோரிக்கை

திகதி : 2022-07-07

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு போக்குவரத்து வசதிகளை வழங்குவதில் கடும் சிரமங்களை எதிர்நோக்கும் கர்ப்பிணி அரச உத்தியோகத்தர்களை அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகாமையில் உள்ள வேறொரு சேவைநிலையத்திற்கு பணிக்கு நியமிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் கர்ப்பிணி உத்தியோகத்தர்கள் அவ்வாறு நியமிப்பதில் ஏதேனும் இடையூறுகள் காணப்படுமாயின் தமது கடமைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வீட்டிலிருந்தே இணையவழியில் தமது கடமைகளை செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமெனவும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம்  கேட்டுக்கொள்கின்றது.

பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தவிசாளர் கௌரவ சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே அவர்கள் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே குறித்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அரச அலுவலகங்களுக்கு உத்தியோகத்தர்களை அழைப்பதை கட்டுப்படுத்துவது தொடர்பில் 17.06.2022 திகதியிடப்பட்ட  பொது நிர்வாக சுற்றறிக்கை இல. 16/2022 பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால்  வெளியிடப்பட்டது.

இதன்படி, குறித்த சுற்றறிக்கையின் 02ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வசிப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள வேறு சேவை நிலையத்திற்கு அரச உத்தியோகத்தர்களை பணிக்கமர்த்தப்படுவது தொடர்பில் கர்ப்பிணி அரச உத்தியோகத்தர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில்  அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் தனது கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும், அவ்விடயம் தொடர்பில் தனியார் துறையினருக்கும் பிரயோகித்தல் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தவிசாளர் கௌரவ சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே விடுத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom