இறக்குமதி செய்யப்படும் அரிசி போன்ற பொருட்களின் மீதான வரிக் குறைப்பு உண்மையில் பொதுமக்களுக்கு நன்மையளிக்கிறதா என்பதை ஆராய்வதில் நிதியமைச்சு முனைப்புடன் ஈடுபட வேண்டும் – அரசாங்க நிதி பற்றிய குழு |
திகதி : | 2022-04-19 |
சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2022 சனவரி 11 ஆம் திகதிய 2262/14 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டு 05.04.2022 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒழுங்கு விதிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அனுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி வழங்கியது.
மேற்படி தீர்மானத்தை கருத்தில் கொண்டு, இறக்குமதி செய்யப்படும் அரிசி போன்ற பொருட்களின் மீதான வரிக் குறைப்பு உண்மையில் பொதுமக்களுக்கு நன்மையளிக்கிறதா என்பதை ஆராய்வதில் நிதியமைச்சு முனைப்புடன் ஈடுபட வேண்டும் என்று குழுவின் தலைவரும், உறுப்பினர்களும் தெரிவித்தனர்.
மேலும், 2007ஆம் ஆண்டு 48ஆம் இலக்க வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் நிதி அமைச்சரினால் விதிக்கப்பட்ட 2021.11.23 திகதிய 2255/8 ஆம் இலக்க, 2021.12.21ஆம் திகதிய 2259/9 ஆம் இலக்க, 2021.12.31ஆம் திகதிய 2260/72 ஆம் இலக்க, 2022 சனவரி 11 ஆம் திகதிய 2262/15 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட கட்டளைகளை கவனத்தில் எடுத்துக் கொண்ட இக்குழு இவற்றுக்கு அனுமதி வழங்கியது.
இதற்கமைய, குழுவின் அறிக்கை அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் கௌரவ அனுர பிரியதர்ஷன யாப்பாவினால் 2022 ஏப்ரல் 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
இக்கூட்டத்தில் அமைச்சர் கௌரவ விதுர விக்ரமநாயக, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார மற்றும் நளின் பெர்னான்டோ ஆகியோர் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்










