தேர்தல் முறைமை தொடர்பான நிபுணர் குழுவின் கருத்துக்களை மேலும் பெற்றுக்கொள்ள கலந்துரையாடல் |
திகதி : | 2022-03-23 |
உத்தேச தேர்தல் முறைமை தொடர்பில் நிபுணர் குழுவின் கருத்துக்களை மேலும் பெற்றுக்கொள்வது குறித்துத் தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங்காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவில் கலந்துரையாடப்பட்டது.
தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங்காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தலைமையில் நேற்று (22) கூடிய போதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
விசேடமாக இந்தக் குழுவில் அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் கலந்துகொண்டதுடன், இது தொடர்பில் ஆலோசனை பெறுவதற்கு நியமிக்கப்பட்ட நிபுணர் குழு உறுப்பினர்களின் கருத்துக்களை மேலும் பெற்றுக்கொள்வது பொருத்தமானது என்பது அவர்களின் கருத்தாக இருந்தது. அதற்கமைய நிபுணர் குழுவின் கருத்துக்களை மேலும் பெற்று எதிர்வரும் ஏப்ரல் 07 ஆம் திகதி மீண்டும் கூடுவதற்கு இங்கு தீர்மானிக்கப்பட்டது.
இந்த விசேட குழுவில் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ அனுரகுமார திசாநாயக்க, கௌரவ ரஞ்சித் மத்துமபண்டார, கௌரவ விமல் வீரவன்ச, கௌரவ ரவுப் ஹக்கீம், கௌரவ கபீர் ஹஷீம், கௌரவ எம்.ஏ. சுமந்திரன், கௌரவ மனோ கணேஷன், கௌரவ மதுர விதானகே மற்றும் இந்த விசேட குழுவின் செயலாளர் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர ஆகியோர் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்









