பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டமூலத்துக்கு வெளிநாட்டு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அனுமதி |
திகதி : | 2022-03-14 |
பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டமூலத்தை இரண்டாவது மதிப்பீட்டுக்காக பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு கடந்த 11ஆம் திகதி கூடிய வெளிநாட்டு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் கூடிய வெளிநாட்டு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிலேயே இதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இந்தச் சட்டமூலம் முதலாவது வாசிப்புக்காக கடந்த பெப்ரவரி 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய திருத்தங்களுடன் கூடிய சட்டமூலத்துக்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியிருப்பதுடன், இது குறித்த அறிக்கையை அடுத்த பாராளுமன்ற அமர்வு வாரத்தில் சமர்ப்பிப்பதற்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில், நீதி அமைச்சர் கௌரவ அலி சப்ரி, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ மயந்த திஸாநாயக, கௌரவ மதுர விதானகே, கௌரவ (கலாநிதி) சுரேன் ராகவன், கௌரவ (பேராசிரியர்) சரித ஹேரத், கௌரவ இசுறு தொடங்கொட ஆகியோரும் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்











