விபத்துக்களின் போது தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச இழப்பீட்டுத் தொகை 20 இலட்சம் ரூபா வரை அதிகரிப்பு - சட்டமூலத்துக்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஒப்புதல் |
திகதி : | 2022-02-24 |
தொழிலின் போது இடம்பெறும் அவசர விபத்துக்கள் காரணமாகப் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு வழங்கும் இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்கும் வேலையாட்கள் நட்டஈடு (திருத்தச்) சட்டமூலத்தை இரண்டாம் மதிப்பீட்டுக்காக பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு தொழில் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் ஒப்புதல் அண்மையில் வழங்கப்பட்டது.
தொழில் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி. சில்வா மற்றும் இராஜாங்க அமைச்சர் கௌரவ பியங்கர ஜயரத்ன ஆகியோரின் தலைமையில் தொழில் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியதுடன், முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ மைத்ரிபால சிறிசேன, கௌரவ பாரளுமன்ற உறுப்பினர்களான ஜோன் செனவிரத்ன, சாமர சம்பத் தசநாயக்க, சாந்த பண்டார மற்றும் வைத்திய கலாநிதி கயாஷான் நவனந்த ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
தொழிலின் போது இடம்பெறும் அவசர விபத்துக்கள் காரணமாகப் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு மரணத்தின் போது அல்லது நிரந்தர இயலாமையின் போது தற்பொழுது வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையான 550,000 ரூபாவை 2,000,000 (20 இலட்சம்) ரூபவாக அதிகரித்தல் இதன்மூலம் இடம்பெறுகின்றது.
மேலும், தொழிலின் போது மாத்திரம் இழப்பீடு வழங்கும் தற்போதைய ஏற்பாட்டுக்குப் பதிலாக, வேலைத்தளத்துக்கு வரும் போதும், வேலைத்தளத்திலிருந்து செல்லும் போதும் என்ற ஏற்பாடு உள்ளீர்க்கப்பட்டு வரைவிலக்கணத்தை விரிவுபடுத்துதல் இதன்மூலம் இடம்பெறுவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். மேலும், இழப்பீடு வழங்குதல் தாமதமாகும் போது அறவிடப்படும் மிகைக்கட்டணத்தை 10% இலிருந்து 30% வரை அதிகரித்தல் உள்ளிட்ட சில திருத்தங்களும் முன்மொழியப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியத்தின் வருடாந்த அறிக்கைகளும் இதன்போது கருத்தில் கொள்ளப்பட்டன.
தொழில் அமைச்சின் செயலாளர் மாபா பதிரன உள்ளிட்ட அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்











