இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பொது மனுக்கள் பற்றிய குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் புஷ்பகுமார தெரிவு

திகதி : 2022-02-10

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரின் பொது மனுக்கள் பற்றிய குழுவின் தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் புஷ்பகுமார இன்று (10) போட்டியின்றித் தெரிவுசெய்யப்பட்டார்.

பாராளுமன்றத்தின் 122 (1) நிலையியற் கட்டளைக்கு அமைய இந்தக் குழுவுக்கான உறுப்பினர்கள் அண்மையில் தெரிவுக்குழுவினால் நியமிக்கப்பட்டனர். இதற்கமைய கௌரவ அமைச்சர்களான காமினி லொக்குகே, கௌரவ இராஜாங்க அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, நிமல் லான்சா, ஜானக வக்கும்புர, வியாழேந்திரன், தேனுக விதானகமகே, ஜீவன் தொண்டமான், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான இம்தியாஸ் பாகிர் மாகார், திலிப் வெதஆரச்சி, மனுஷ நாணயக்கார, கே.காதர் மஸ்தான், அசோக்க பிரியந்த, சிவஞானம் சிறீதரன், துஷார இந்துனில் அமரசேன, முஜிபுர் ரஹுமான், ரோஹினீ குமாரி விஜேரத்ன, வருண லியனகே, ஜகத் குமார சுமித்திராரச்சி, கீதா சமன்மலீ குமாரசிங்ஹ, குலசிங்கம் திலீபன், நிபுண ரணவக, ராஜிகா விக்ரமசிங்ஹ ஆகியோர் இதில் உள்ளடங்குகின்றனர்.

இதற்கமைய, ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் இக்குழுவின் உறுப்பினர்களாகப் பணியாற்றிய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் குமரா வெல்கமவுக்குப் பதிலாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்னவும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.முஷாரப் அவர்களுக்குப் பதிலாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொது மனுக்கள் பற்றிய குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும் மனுக்கள் குறித்து விசேட கவனம் செலுத்தவேண்டிய முறைமை தொடர்பிலும், பொது மக்களுடன் நேரடியாகத் தொடர்புபடுவது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அத்துடன், பொது மனுக்களை விரைவில் முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் பாராளுமன்ற அமர்வு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இக்குழுவைக் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பது பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom