இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா) தலைவராகப் பேராசிரியர் திஸ்ஸ விதாரண மீண்டும் தெரிவு

திகதி : 2022-02-10

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவுசெய்யப்பட்டார். பாராளுமன்ற வளாகத்தில் இன்று (10) கூடிய அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பெயரை முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் அஸோக அபேசிங்ஹ வழிமொழிந்தார்.

பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராகக் கடமையாற்றியிருந்தார்.

பாராளுமன்றத்தின் 119 (1) நிலையியற் கட்டளைக்கு அமைய இந்தக் குழுவுக்கான உறுப்பினர்கள் அண்மையில் தெரிவுக்குழுவினால் நியமிக்கப்பட்டனர். இதன்படி, அமைச்சர் உதய கம்மன்பில, இராஜாங்க அமைச்சர்களான துமிந்த திஸாநாயக்க, தயாசிறி ஜயசேகர, லசந்த அழகியவன்ன, வைத்தியகலாநிதி சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே, ஷெஹான் சேமசிங்க, பிரசன்ன ரணவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க, ஹரின் பெர்னாந்து, நிரோஷன் பெரேரா, அஸோக அபேசிங்ஹ, புத்திக பத்திறண, கே. காதர் மஸ்தான், மொஹமட் முஸம்மில், சிவஞானம் சிறீதரன், ஹேஷா விதானகே, வைத்தியகலாநிதி உபுல் கலப்பத்தி, பீ.வை.ஜீ. ரத்னசேக்கர, வீரசுமன வீரசிங்ஹ,  பேராசிரியர் ரஞ்சித் பண்டார, கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாவர்.

அரசாங்கச் செலவுகளை எதிர்நோக்குவதற்காகப் பாராளுமன்றத்தால் வழங்கப்பட்ட ஒதுக்கீட்டுத் தொகைகளைக் காட்டுகின்ற கணக்குகளையும் குழு தனக்கெனக் கருதும் பாராளுமன்றத்தின் முன்னிடப்படும் பிற கணக்குகளையும் கணக்காய்வாளர் தலைமையதிபதியின் உதவியுடன் பரிசோதனை செய்வது அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் கடைமையாகும்.

இன்றைய கூட்டத்தில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் உறுப்பினர்களான இராஜாங்க அமைச்சர்களான துமிந்த திசாநாயக, தயாசிறி ஜயசேகர, ஷெஹான் சேமசிங்க, பிரசன்ன ரணவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க, நிரோஷன் பெரேரா, அஸோக அபேசிங்ஹ, மொஹமட் முஸம்மில், சிவஞானம் சிறீதரன், வைத்தியகலாநிதி உபுல் கலப்பத்தி, பீ.வை.ஜீ. ரத்னசேக்கர, வீரசுமன வீரசிங்ஹ,  பேராசிரியர் ரஞ்சித் பண்டார ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

1 2

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom