இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவுக்குப் புதிய உறுப்பினர்கள் நியமனம்

திகதி : 2022-01-20

பாராளுமன்ற நிலையியற் கட்டளை  115 இன் ஏற்பாடுகள்  மற்றும்  பாராளுமன்றத்தில் இன்று (20) நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களை கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (20) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

இதற்கயை கௌரவ சபாநாயகர் இதன் தவிசாளராக நியமிக்கப்படுவதுடன், பிரதிச் சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர், பாராளுமன்றச் சபை முதல்வர், பாராளுமன்ற எதிர்க்கட்சியின் தலைவர், அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசான், எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் உட்பட மேலும் 21 பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்றையதினம் 20 உறுப்பினர்களின் பெயர்களை சபாநாயகர் அறிவித்திருந்ததுடன், மற்றுமொரு உறுப்பினரின் பெயர் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும். பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் கடமையாற்றுவதற்கு பெயர் குறிப்பிடப்பட்டுள்ள உறுப்பினர்கள் வருமாறு,

1.    கௌரவ சமல் ராஜபக்ஷ
2.    கௌரவ நிமல் சிறிபால த சில்வா
3.    கௌரவ (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ்
4.    கௌரவ டக்ளஸ் தேவானந்தா
5.    கௌரவ டலஸ் அழகப்பெரும
6.    கௌரவ விமல் வீரவங்ச
7.    கௌரவ பெசில் ரோஹண ராஜபக்ஷ
8.    கௌரவ மஹிந்த அமரவீர
9.    கௌரவ வாசுதேவ நாணாயக்கார
10.    கௌரவ பிரசன்ன ரணதுங்க
11.    கௌரவ எம். யூ. எம். அலி சப்ரி
12.    கௌரவ கயந்த கருணாதிலக்க
13.    கௌரவ ரஊப் ஹகீம்
14.    கௌரவ அநுர திசாநாயக்க
15.    கௌரவ டிலான் பெரேரா
16.    கௌரவ றிஸாட் பதியுதீன்
17.    கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார
18.    கௌரவ மனோ கணேசன்
19.    கௌரவ ஜீ.ஜீ. பொன்னம்பலம்
20.    கௌரவ எம்.ஏ. சுமந்திரன்

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom