ஏழு இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் ஒரு உயர்ஸ்தானிகர் ஒருவரின் நியமனத்துக்கு உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி |
திகதி : | 2021-12-04 |
ஏழு இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் ஒருவரின் நியமனத்துக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (03) நடைபெற்ற பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் மாலைதீவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக ஏ.எம்.ஜே.சாதிக் அவர்களை நியமிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தவிரவும் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சின் செயலாளராக திருமதி.கே.எம்.எஸ்.டி.ஜயசேகரவின் நியமனத்துக்கும், உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளராக திரு.என்.எச்.எம்.சித்ரானந்தவின் நியமனத்துக்கும் உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.
சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சின் செயலாளராக செல்வி.ஏ.கே.டபிள்யூ.டபிள்யூ.எம்.என்.கே.வீரசேகரவின் நியமனத்துக்கும், பின்தங்கிய கிராமிய பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளராக கலாநிதி.டி.பி.எஸ். அமல் ஹர்ஷ.டி.சில்வாவின் நியமனத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வழங்கல் கருத்திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளராக திரு.எஸ்.ஜீ.விஜயபந்துவின் நியமனத்துக்கும், கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளராக பொறியியலாளர் கீர்த்தி ரஞ்சித் அபேசிறிவர்த்தனவின் நியமனத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அலங்கார மீன்கள், நன்னீர் மீன்கள், இறால் வளர்ப்பு, கடற்றொழில் துறைமுகங்கள் அபிவிருத்தி, பல நாள் கடற்றொழில் அலுவல்கள் மற்றும் மீன் ஏற்றுமதி இராஜாங்க அமைச்சின் செயலாளராக திரு.ஜயந்த சந்திரசோமவின் நியமனத்துக்கும் உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.
இக்கூட்டத்தில் அமைச்சர்களான சபை முதல்வர் தினேஷ் குணவர்தன, டக்ளஸ் தேவானந்தா, பந்துல குணவர்தன, உதய கம்மன்பில, கெஹலிய ரம்புக்வெல்ல, இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன் செனவிரத்ன, ரிஷாட் பதியுதீன், தலதா அத்துகோரள, தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






