இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

நெல் விவசாயிகள் மற்றும் நுகர்வோரை பாதுகாக்கும் வகையிலான முடிவுகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும் - அரசாங்க நிதி பற்றிய குழு வலியுறுத்து

திகதி : 2021-12-03

கடந்த ஏப்ரலில் விதிக்கப்பட்ட அரிசி மீதான இறக்குமதித் தடையை மீண்டும் அனுமதிப்பதாயின், எதிர்வரும் சிறுபோக நெல் அறுவடை குறித்த முறையான முன்னறிவிப்பின் பின்னரே அதனை மேற்கொள்ளவேண்டும் என அரசாங்க நிதி பற்றிய குழுவின் உறுப்பினர்கள் அண்மையில் (01) பரிந்துரை செய்தனர்.

தற்போதைய விசேட சூழ்நிலையில், உள்நாட்டு நெல் விவசாயிகளின் அறுவடைகளுக்கு நியாயமான விலையையும், நுகர்வோருக்கு நியாயமான விலையில் தரமான அரிசியை பெற்றுக்கொள்வதற்கு    சந்தர்ப்பத்தையும் வழங்குவதற்கு இந்த நிலைமையை தர்க்கரீதியாக ஆராய்ந்து மதிப்பிட வேண்டும் என அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா சுட்டிக்காட்டினார்.

இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள தரவுகளுக்கு அமைய, எதிர்பார்க்கப்படும் சிறுபோக விளைச்சல் கடந்த முறையில் 2/3 பங்காக இருக்கும் என இறக்குமதி, ஏற்றுமதி பணிப்பாளர் நாயகம் குழுவில் தெரிவித்தார். இவ்வாறு அனுமதிப்பத்திரம் இன்றி அரிசி இறக்குமதிக்கு இடமளிப்பதால் இலங்கையின் நுகர்வுக்கு தேவையான அளவை விட அதிகளவு அரிசியை இறக்குமதி செய்ய இறக்குமதியாளர்கள் முயற்சிப்பதாகவும், அதனால் உள்நாட்டு விவசாயிகள் முகங்கொடுக்கும் சிரமங்களை நீக்க நிதி அமைச்சு தலையிட வேண்டும் என இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் நளின் பிரனாந்து தெரிவித்தார். உதாரணமாக, இந்தியாவுடன் ஒப்பிடும் போது அனைத்து பொருளாதார நிலைகளிலும் உள்ள மக்களுக்கு குறைந்த விலையில் கொள்வனவு செய்யக்கூடிய அரிசி உள்நாட்டு சந்தையில் இருப்பது முக்கியமானது என நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு அவர் சுட்டிக்காட்டினார்.
 
நிதி அமைச்சரின் பணிப்புரைக்கு அமைய பச்சை அரிசி, நாட்டரிசி மற்றும் சம்பா அரிசி உள்ளிட்ட அரிசி வகைகளின் இறக்குமதிக்கு அனுமதியளிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அனுமதியை பெற்றுக்கொள்வதற்கு அரங்க நிதி பற்றிய குழுவில் வலியுறுத்தப்பட்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா குறிப்பிடுகையில், சரியான தர்க்க ரீதியான மதிப்பீடு இன்றி இவ்வாறான தீர்மானங்களுக்கு இணங்குவதால் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் அதிகாரிகள் இதனை விட விமர்சனரீதியாக செயற்படவேண்டும் என்றார்.

அதேபோன்று, அரிசி சந்தை தொடர்பான நுகர்வோர் உரிமைகள் தொடர்பில் செயற்படும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை இதனை விட வினைத்திறனாக செயற்படவேண்டியதன் அவசியம் மற்றும் உள்நாட்டு சிறிய மற்றும் நடுத்தர அரசி வர்த்தகர்களை வலுப்படுத்துவதற்கு வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட  வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பிலும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

மேலும், பாராளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கு அமைய, ஒதுக்கீட்டுச் சட்ட மூலம் அரச கொள்கைகளுடன் எந்தளவு இணங்குகின்றது என்பது தொடர்பான அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கையை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.

2021ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட கணிப்புகளை நிறைவேற்ற முடிந்ததா என்பது தொடர்பில் நிதியமைச்சின் அதிகாரிகளிடம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதன்போது கேள்வியெழுப்பினார். நிதி அமைச்சின் அதிகாரிகள் முன்வைத்த புள்ளிவிபரங்கள் மற்றும் தரவுகளுக்கு அமைய, அனைத்துக் கடன்களையும் மீளச் செலுத்துவதற்கு உள்நாட்டு நிதியை மாத்திரம் பயன்படுத்தினால், எதிர்வரும் காலங்களில் வட்டி வீதங்கள் அதிகரித்து உள்நாட்டு தனியார் துறைக்கு பாதகமான விளைவை ஏற்படுத்தும் என்பது குழுவின் அவதானிப்பாகும் என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டினார்.

 

1 2

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom