மஹாபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப்பொறுப்பு நிதியம் (திருத்தச்) சட்டமூலத்துக்கு ஒப்புதல் |
திகதி : | 2021-11-26 |
1981 ஆம் ஆண்டின் 66 ஆம் இலக்க மஹாபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் வர்த்தக அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அங்கீகரிக்கப்பட்டது.
வர்த்தகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் நேற்று (25) நடைபெற்ற வர்த்தக அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இந்தத் (திருத்த) சட்டமூலத்தின் மூலம் மூன்று முக்கிய விடயங்கள் திருத்தப்படவுள்ளன. மஹாபொல புலமைப்பரிசில் நிதியத்தின் பெயரை லலித் அத்துலத்முதலி புலமைப்பரிசில் நிதியமாக மாற்றுவது, மஹாபொல அறக்கட்டளையின் தலைவர் பதவிக்கு ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்ட ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவரை நியமிப்பது மற்றும் பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் இந்நிறுவனங்களை கையாள்வது போன்ற திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். இதன்படி, இந்த சட்டமூலம் எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இங்கு கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பில் சமூகத்தில் பேசப்பட்டு வரும் பிரச்சினைகள் தொடர்பில் குறிப்பிட்டார். கலவையில் ஏற்பட்ட மாற்றத்தால் எரிவாயு சிலிண்டர்களில் வெடிப்பு ஏற்படவில்லையென்றும், இதனை மொரட்டுவ பல்கலைக்கழகம் ஆராய்ந்து உறுதிப்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார். புதிய 18 லீற்றர் எரிவாயு சிலிண்டரை இடைநிறுத்தவும் லிட்ரோ நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே எரிவாயு இணைப்புகள் தொடர்பில் நிலவும் பொய்யான கருத்தாக்கங்கள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும், லங்கா சதோசவின் புதிய கிளைகளை நிறுவுதல், அலங்கார மீன் வளர்ப்பை ஊக்குவித்தல் மற்றும் ஏற்றுமதி செய்தல் மற்றும் பச்சைப்பயறுகளை அரசாங்கத்தினால் கொள்வனவு செய்தல் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹன திஸாநாயக்க, ஜகத் புஷ்பகுமார, அமரகீர்த்தி அத்துகோரள, கீதா சமன்மலி குமாரசிங்க, அஜித் ராஜபக்ஷ மற்றும் கலாநிதி கயாஷான் நாவானந்த ஆகியோர் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்











