இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

மூன்று ஊடக நிறுவனங்கள் நாளை (26) பாராளுமன்ற விசேட குழு முன்னிலையில் சாட்சியமளிக்கவுள்ளன

திகதி : 2021-11-25

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங்காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு முன்னிலையில் மூன்று ஊடக நிறுவனங்கள் நாளை (26) சாட்சியமளிக்கவுள்ளன.

அதற்கமைய, டெல்ஷான் ஊடக வலையமைப்பு, வொய்ஸ் ஒப் ஏசியா ஊடக வலையமைப்பு மற்றும் எம்.டீ.வீ. ஊடக வலையமைப்பு ஆகியன சாட்சியமளிக்கவுள்ளதாக குழுவின் செயலாளரும், பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹனதீர தெரிவித்தார்.

பாராளுமன்ற விசேட குழுவின் தலைவரும், சபை முதல்வருமான அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களின் தலைமையில் பிற்பகல் 02.00 மணிக்கு குழு கூடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom