இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்துக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி

திகதி : 2021-10-26

2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்துக்கு அண்மையில் (21) இடம்பெற்ற அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடு சட்டமூலம் 2021.09.29 அன்று வர்த்தமானி அறிவித்தலில் அனுபந்தம் ஒன்றாக பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அதனை வரவுசெலவுத்திட்ட முதலாவது வாசிப்பாக பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படுவது சம்பிரதாயமாகும்.

பாராளுமன்றத்தின் அனுமதிக்காக முன்வைக்கப்பட்ட இந்த ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் உள்ள மதிப்பிடப்பட்ட செலவுக்கு அமைய 5134 பில்லியன் ரூபா முழு செலவாவதுடன், அதில் அரச கடன்களை மீளச் செலுத்துவதற்கு  1521 பில்லியன் ரூபா குறிப்பிடப்பட்டுள்ளது. நிதி அமைச்சின் செயலாளரும் திறைசேரியின் செயலாளருமான கலாநிதி எஸ்.ஆர். ஆட்டிகல ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் உள்ள மீண்டெழும் செலவுகள் தொடர்பில் குழு உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தியதுடன், அதில் பிரதானமாக அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு 980.2 பில்லியன் ரூபா உள்ளடங்குவதாக சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று, அரச கடன்களுக்கான வட்டி செலுத்துவதற்கு 1001 பில்லியன் ரூபாவும், ஓய்வூதியம் மற்றும் அங்கவீனமான இராணுவத்தினருக்கான நலன்புரிக் கொடுப்பனவுக்கு 310 பில்லியன் ரூபாவும், மருத்துவ தேவைகளுக்கு 68 பில்லியன் ரூபாவும், சமுர்த்தி நிவாரணத்துக்கு 50 பில்லியன் ரூபாவும், பசளைக்கு 35 பில்லியன் ரூபாவும், ஏனைய நிவாரணங்களுக்கு 69 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குழு முன்னிலையில் மேலும் தெரிவித்தார்.

இம்முறையும் எந்த மாற்றமும் இன்றி கல்வி, சுகாதாரம் மற்றும் மனித மூலதனத்தின் வளர்ச்சியை இலக்காகக் கொண்ட அரச திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக திறைசேரியின் செயலாளர் சுட்டிக்காட்டினார். ஒருசிலர் குறிப்பிடுவது போன்று மீண்டெழும் செலவுகளில் பாதுகாப்பு அமைச்சின் அல்லது நிதி அமைச்சின் செலவுகள் பரந்தளவில் காணப்படுவது, பாதுகாப்பு அமைச்சின் சம்பளம் வழங்குதல் மற்றும் நிதி அமைச்சின் செலவுகளில் கடன்களை மீளச் செலுத்துதல் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளதாகும் என அவர் விசேடமாக குழுவின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

இந்த ஒதுக்கீட்டு சட்டமூலத்துக்கு குழுவில் அனுமதி வழங்க முடியும் எனினும், கொவிட் நிலைமையில் இலங்கை உள்ளிட்ட நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் முகங்கொடுத்துவரும் பொருளாதார சவால்கள் சாதாரணமானது அல்ல என குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா சுட்டிக்காட்டினார்.

இராஜங்க அமைச்சுக்களினால் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கான நிதியை கட்டுப்படுத்துவதன் மூலம்  தனியார் முதலீட்டாளர்களுடன் சேர்ந்து பணியாற்றுவதற்கு சுலபமான சூழலொன்றை உருவாக்குவதற்கு நிதி அமைச்சும் தலையிட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா திறைசேரியின் செயலாளருக்கு தெரிவித்தார். இது குழுவின் ஆளும் தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு அனைத்து உறுப்பினர்களினதும் வரவேற்புக்கு உள்ளானதுடன் ஒவ்வொரு சிறிய சேமிப்பும் இது போன்ற தருணத்தில் முக்கியமானது என சுட்டிக்காட்டினர்.

அண்மையில் அரசாங்கத்தினால் பால்மா, சீனி, அரிசி போன்ற அத்தியாவசிய நுகர்வு பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை அகற்றியமை முன்னேற்றமான நடவடிக்கையாகும் என இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி. சில்வா குறிப்பிட்டார்.

புதிய லிபரல் பொருளாதார முறையில் அரசாங்கம் அவ்வாறு செய்வதில் எந்தத் தவறும் இல்லை என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார, அரசாங்கம் விரைவில் நிலையான பொருளாதாரமொன்றுக்கான சரியான நடவடிக்கைகளை எடுக்க 2022 வரவுசெலவுத்திட்டம் காரணமாக இருக்கும் என சுட்டிக்காட்டினார்.  

கடந்த (21) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்தில்  இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா, பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ஹர்ஷ டி. சில்வா, பேராசிரியர் ரஞ்சித் பண்டார, இசுறு தொடங்கொட, அனுப பஸ்குவல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த ஒதுக்கீட்டு சட்டமூலத்துக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதியை பெற்றுக்கொள்வதற்காக நிதி அமைச்சின் செயலாளரும் திறைசேரியின் செயலாளருமான எஸ்.ஆர். ஆட்டிகல மற்றும் கலாநிதி கபில சேனநாயக்க உள்ளிட்ட நிதி அமைச்சின் உயரதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்.

 

1 2

3

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom