இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

கணினி முகாமைத்துவ தகவல் முறைமையினை அடிப்படையாகக் கொண்டு அரச நிறுவனங்களை மதிப்பிடும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில்

திகதி : 2021-10-07

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான கணினி முகாமைத்துவ முறைமையினை அடிப்படையாகக் கொண்டு அரச நிறுவனங்களை மதிப்பீடு செய்வது தொடர்பான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் மூன்றாவது அறிக்கை இன்று (07) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இக்குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண இந்த அறிக்கையை சமர்ப்பித்தார். 2019 நிதி ஆண்டுக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் கணினி முகாமைத்துவ தகவல் முறைமையினால் 840 அரசாங்க நிறுவனங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டுக்கான இந்த அறிக்கை 2020ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க குழு எதிர்பார்த்திருந்தபோதும் கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக இதனை சமர்ப்பிக்கக் காலதாமதம் ஆகியதாக அக்குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண குறிப்பிட்டார்.
2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை மதிப்பீடு செய்யப்பட்ட சகல அரச நிறுவனங்களினதும் நிதிசார் மற்றும் செயலாற்றுகையின் சராசரியும் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படுவதாக இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு 64 சதவீதமும், 2016ஆம் ஆண்டு 71 சதவீதமும், 2017ஆம் ஆண்டு 80 சதவீதமும், 2018ஆம் ஆண்டு 78 சதவீதமும், 2019ஆம் ஆண்டு 82 சதவீதம் முன்னேற்றம் பதிவாகியுள்ளது.

2019 நிதியாண்டில் அனைத்து நிறுவனங்களினாலும் அடையப்பெற்ற முன்னேற்ற சதவிகிதமானது 2015 அடிப்படை ஆண்டாகக் கொண்டு நோக்கும்போது 28 சதவீதமாகும்.

கணினி முகாமைத்துவ முறைமையினை அடிப்படையாகக் கொண்ட மதிப்பிடப்பட்ட ஒவ்வொரு நிறுவன வகைகளையும் 2015  அடிப்படை ஆண்டாகக் கொண்டு வேறு வேறாகப் பார்க்கும்போது  அரசாங்க அமைச்சுக்கள் அடைந்துள்ள முன்னேற்றம் 11.7% ஆகும்.

இந்தக் காலப்பகுதியில் அரசாங்கத் திணைக்களங்கள் 10.49 சதவீதமும், அரசாங்கத்தின் விசேட செலவின அலகுகள் 26.56 சதவீதமும், மாவட்ட செயலகங்கள் 8.62 சதவீதமும், மாகாண சபை நிதியங்கள் 14.74 சதவீதமும், மாகாண சபைகளின் அமைச்சு திணைக்களம் சார் விசேட செலவின அலகுகள் 21.22 சதவீதமும், மாகாண சபைகளின் நிதியச் சட்ட நிறுவனங்கள் 58.46 சதவீதமும், மாநகரசபைகள் 16.65 சதவீதமும், பிரதேச சபைகள் 17.5 சதவீதமும் முன்னேற்றம் அடைந்திருப்பதாக இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியில் கூட பரந்த அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்ட இந்தநிகழ்ச்சித் திட்டத்தை முன்வைத்தமை தொடர்பில் எட்டாவது பாராளுமன்றத்தின் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண குறிப்பிட்டார்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom