பாராளுமன்ற குழுக்கள் பல அடுத்த வாரத்தில் கூடும் |
திகதி : | 2021-10-03 |
பாராளுமன்றத்தில் அடுத்தவாரம் இரண்டு அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களும் இரண்டு பாராளுமன்ற விசேட குழுக்களும் கூடவுள்ளன.
அதற்கமைய, எதிர்வரும் 04 ஆம் திகதி தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவும் எதிர்வரும் 06 ஆம் திகதி நீதி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவும் கூடவுள்ளன.
இதேவேளை, தற்போதுள்ள அமைச்சுகளின் கீழ் உள்வாங்கப்படாத அரச நிறுவனங்களால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுகின்ற விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான பாராளுமன்ற விசேட குழு எதிர்வரும் 05 ஆம் திகதி கூடவுள்ளதுடன் தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங்காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு எதிர்வரும் 07 மற்றும் 08 ஆகிய இரு தினங்களிலும் கூடவுள்ளது.
மேலும் நிலையியற் கட்டளைகள் பற்றிய குழு எதிர்வரும் 05 ஆம் திகதி கூடவுள்ளது.
உரிய சுகாதார ஒழுங்குவிதிகளுக்கு அமைவாக, தேவையான அதிகாரிகளை ஒன்லைன் ஊடாகவும் இணைத்துக்கொண்டு அடுத்தவாரம் பல பாராளுமன்றக் குழுக்கள் கூடவுள்ளன.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






