குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை (திருத்தம்) சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நீதி அமைச்சுசார் ஆலோசனைக் குழு இணக்கம் |
திகதி : | 2021-06-23 |
குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை (திருத்தம்) சட்டமூலம் மற்றும் இலக்க சித்திரவதை மற்றும் வேறு கொடுரமான, மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமாக நடத்துதல் அல்லது தண்டித்தல் என்பவற்றுக்கெதிரான சவமவாயம் (திருத்தம்) சட்டமூலம் ஆகியவற்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நீதி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
நீதி அமைச்சர் எம்.யூ.எம்.அலி சப்ரி தலைமையில் நேற்று (22) நீதி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் விசேட கூட்டத்திலேயே இதற்கான இணக்கப்பாடு காணப்பட்டது.
2021.04.24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 1979ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை (திருத்தம்) சட்டமூலம், 08.06.2021ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 1994ஆம் ஆண்டு22ஆம் இலக்க சித்திரவதை மற்றும் வேறு கொடுரமான, மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமாக நடத்துதல் அல்லது தண்டித்தல் என்பவற்றுக்கெதிரான சவமவாயம் (திருத்தம்) சட்டமூலம் மற்றும் ஒரு ஒழுங்குவிதி, நான்கு ஆண்டறிக்கைகள் என்பன இக்கூட்டத்தில் கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட்டன. இவற்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க குழு இணங்கியது.
தற்பொழுது நிலவும் கொவிட்-19 தொற்றுநோய் சூழலின் கீழ் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய அரசாங்க அதிகாரிகள் இக்கூட்டத்தில் ஒன்லைன் ஊடாக இணைந்துகொண்டனர்.
நீதி அமைச்சர் அலி சப்ரி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான லொஹான் ரத்வத்த, சுசில் பிரேமஜயந்த பாராளுமன்ற உறுப்பினர்களான வீரசுமன வீரசிங்ஹ ஆகியோர் நேரடியாகக் கலந்துகொண்டிருந்தனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்







