இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்கான சட்டவாக்க நிலையியற் குழுவுக்கு உறுப்பினர்கள் நியமனம் – தலைவர் பதவி பிரதி சபாநாயகர் ரஞ்சியம்பலா பிட்டியவுக்கு

திகதி : 2020-11-27

நிலையியற் கட்டளை 113ன் ஏற்பாடுகளுக்கு அமையவும் கடந்த ஓகஸ்ட் 28ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கும் அமைய ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்கான சட்டவாக்க நிலையியற் குழுவுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குழுவின் தலைவராக பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பாலாபிட்டியவும், உறுப்பினராக  குழுவில் குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் செயற்படவுள்ளனர்.

இதன் ஏனைய உறுப்பினர்களாக அமைச்சர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பவித்திராதேவி வன்னிஆரச்சி, நாமல் ராஜபக்ஷ இராஜாங்க அமைச்சர்களான மொஹான் பிரியதர்ஷன த சில்வா, சிசிர ஜெயகொடி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான டாக்டர் ராஜித சேனாரத்ன, சந்திம வீரக்கொடி, கோவிந்தன் கருணாகரம், ஹெக்டர் அப்புஹாமி, இம்ரான் மஹ்ரூப், ஹர்ஷண ராஜகருணா, பிரேம்நாத் சி.தொலவத்த, மதுர விதானகே, சாகர காரியவசம், ஜயந்த விரசிங்க ஆகியோர் தெரிவுக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சட்டவாக்க நிலையியற் குழுவுக்கு நியமிக்கப்பட்டுள் உறுப்பினர்களின் பெயர்களை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (27) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom