இலங்கையில் இன மற்றும் மத ஒற்றுமையை உறுதிசெய்வதற்காக அதன் விதப்புரைகளை ஆராய்ந்து பாராளுமன்றத்துக்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்றத் தெரிகுழுவின் மூன்றாவது பிராந்திய மாநாடு |
திகதி : | 2019-02-26 |
இலங்கையில் இன மற்றும் மத ஒற்றுமையை உறுதிசெய்வதற்காக அதன் விதப்புரைகளை ஆராய்ந்து பாராளுமன்றத்துக்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்றத் தெரிகுழுவின் மூன்றாவது பிராந்திய மாநாட்டை கௌரவ பாராளுமன்ற சபாநாயகரின் தலைமைத்துவத்துடனும் அனைத்து மதங்களையும் சேர்ந்த வணக்கத்திற்குரிய மதகுருமார், தெரிகுழுவை / காலி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட அரச அலுவலர்கள் ஆகியோரின் பங்கேற்புடனும் 2019, மார்ச் 01 ஆம் திகதி, மு.ப. 9.30 மணி முதல் பி.ப. 2.30 மணி வரை காலி, ஜெட்விங் லைட்ஹவுஸ் ஹோட்டலில் நடத்துவதற்கான அனைத்து ஆயத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
“இலங்கையின் நிலைபெறுதன்மையை நோக்கிய இன மற்றும் மத ஒற்றுமை” என்னும் கருப்பொருளின் கீழ் நடத்தப்படவுள்ள இந்த மாநாட்டில் இலங்கையின் இன மற்றும் மத சகவாழ்வு மீதான பிராந்திய முக்கியத்துவத்துடனான பல விடயங்கள் கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்படும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






