2023 ஏப்ரல் 27ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2023-04-27 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் பற்றிய செயலமர்வு
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2021 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி லொத்தர் சபையின் ஆண்டறிக்கை
(ii) 2021 ஆம் ஆண்டுக்கான மானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞானம் பற்றிய உயர்கல்வி தொடர்பான தேசிய நிலையத்தின் பதினேழாவது வருடாந்த அறிக்கை
(iii) 2021 ஆம் ஆண்டுக்கான கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர் இரசாயனவியல், மூலக்கூற்று உயிரியல் மற்றும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(iv) 2020 ஆம் ஆண்டுக்கான வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஆண்டறிக்கை
(v) 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை போக்குவரத்துச் சபையின் ஆண்டறிக்கை
(vi) 2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை சுற்றுலா அபிவிருத்தி நிதியத்தின் வருடாந்த அறிக்கை
(vii) 2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் வருடாந்த அறிக்கை
(viii) 2015, 2016, 2017, 2018, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கான பரந்தன் கெமிக்கல்ஸ் கம்பனி லிமிடெட்டின் வருடாந்த அறிக்கைகள்
(ix) 2021 ஆம் ஆண்டுக்கான துருசவிய நிதியத்தின் வருடாந்த அறிக்கை
(x) 2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை பொறியியற் பேரவையின் ஆண்டறிக்கை
(xi) 2020 ஆம் ஆண்டுக்கான சுகததாச தேசிய விளையாட்டு கட்டடத் தொகுதி அதிகார சபையின் வருடாந்த அறிக்கை
(xii) 1980 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க, ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சட்டத்தின் 43 ஆம் பிரிவின் கீழ், நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2022 டிசம்பர் 22 ஆம் திகதிய 2311/39 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ எஸ்.எம். சந்திரசேன
(ii) கௌரவ (கலாநிதி) (திருமதி) ஹரினி அமரசூரிய
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
(i) திருகோணமலையில் உள்ள குறிஞ்சாகேணி பாலத்தின் நிர்மாணம் தொடர்பாக 2023.04.26 அன்று ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளின் கீழ் கௌரவ இம்ரான் மஹ்ரூப் அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன அவர்கள் பதிலளித்தார்.
(ii) சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம், உள்ளூர் கடன் மறுசீரமைப்பு போன்றன தொடர்பாக 2023.04.26 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சர் சார்பாக நிதி இராஜாங்க அமைச்சர் கௌரவ செஹான் சேமசிங்ஹ அவர்கள் பதிலளித்தார்.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
ஊழலுக்கெதிரான ஐக்கிய நாடுகள் சபைச் சமவாயத்தின் குறித்த சில ஏற்பாடுகளுக்கும் மற்றும் வேறு சர்வதேச ரீதியில் ஏற்றங்கீகரிக்கப்பட்ட நெறிகள், நியமங்கள் அத்துடன் மிகச்சிறந்த செயல்முறைகள் என்பவற்றுக்கும் பயன்கொடுப்பதற்கும்; இலஞ்சம், ஊழல் பற்றிய சார்த்துதல்களை மற்றும் சொத்துக்களையும் பொறுப்புக்களையும் வெளிப்படுத்தலுடன் தொடர்புபட்ட தவறுகளை மற்றும் இணைந்த தவறுகளைக் கண்டுபிடித்து புலனாய்வுசெய்வதற்கும், இலஞ்சம், ஊழல் பற்றிய தவறுகளுக்காகவும் சொத்துக்களையும் பொறுப்புக்களையும் வெளிப்படுத்தலுடன் தொடர்புபட்ட தவறுகளுக்காகவும் மற்றும் வேறு இணைந்த தவறுகளுக்காகவும் குற்றவழக்குகள் தொடுக்கப்படுவதனைப் பணிப்பதற்கும் அவற்றைத் தொடுப்பதற்கும் சுயாதீனமான ஆணைக்குழுவொன்றைத் தாபிப்பதற்காக ஏற்பாடுசெய்வதற்கும்; ஊழற் பழக்கங்களைத் தடுப்பதனை ஊக்குவிப்பதற்கும் முன்னெடுத்துச் செல்வதற்கும்; ஊழலை முறியடிப்பதற்கு பொதுமக்களுக்கு அறிவு புகட்டுவதற்கும் அவர்களிடையே விழிப்புணர்ச்சியை எழுப்புவதற்கும்; (26 ஆம் அத்தியாயமான) இலஞ்சச் சட்டம், 1994 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வுசெய்வதற்கான ஆணைக்குழுச் சட்டம் மற்றும் 1975 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, சொத்துக்களையும் பொறுப்புக்களையும் வெளிப்படுத்தற் சட்டம் என்பவற்றை நீக்குவதற்கும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ்விளைவான கருமங்களுக்குமாக
“ஊழல் எதிர்ப்பு”
எனும் சட்டமூலத்தினை கௌரவ நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.
சிறப்புரிமைகள்
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்கள் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக 2023 ஜனவரி 17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம், கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 118 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ சட்டத்தரணி பிரேம்நாத் சி. தொலவத்த அவர்களுக்கு “ஆச்சார்ய பூஜ்ய ஹாரிஸ்பட்டுவே அரியவங்ஷாலங்கார மாஹிமி மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்கான தீர்மானம் தொடர்பான ஒத்திவைக்கப்பட்ட விவாதத்தின் தொடர்ச்சி (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)
விவாதிக்கப்பட்டதுடன் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“இலங்கை சமூகத்திற்கான உளவியல் சமூக பாதுகாப்பு முறைமை” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1843 மணியளவில் பாராளுமன்றமானது 2023 ஏப்ரல் 28ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






