இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2023 ஏப்ரல் 26ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2023-04-26

கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : “இலங்கை மத்திய வங்கி” சட்டமூலம் சம்பந்தமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக 2023.04.04 அன்று சபையில் வெளியிடப்பட்ட அறிவித்தல் சம்பந்தமான தெளிவுபடுத்தல்    
B : கௌரவ அஜித் ராஜபக்ஷ, பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2021 ஆம் ஆண்டுக்கான தேசிய கல்வி ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை
(ii)    2021 ஆம் ஆண்டுக்கான ஹோமியோபதி மருத்துவ சபையின் ஆண்டறிக்கை
(iii)    2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான கடன் இணக்க சபைத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள்

(iv) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு 2022 நவம்பர் 30 ஆம் திகதிய 2308/17 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(v)    2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு 2023 சனவரி 04 ஆம் திகதிய 2313/34 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(vi)    2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு 2023 சனவரி 25 ஆம் திகதிய 2316/28 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(vii)    2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் மற்றும் 5 ஆம் பிரிவுகளின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு 2023 பெப்ரவரி 20 ஆம் திகதிய 2320/04 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(viii)    2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு 2023 மார்ச் 04 ஆம் திகதிய 2321/76 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(ix)    2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு 2023 மார்ச் 07 ஆம் திகதிய 2322/20 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(x)    2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 5 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு 2023 மார்ச் 07 ஆம் திகதிய 2322/21 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xi)    2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் மற்றும் 5 ஆம் பிரிவுகளின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு 2023 மார்ச் 17 ஆம் திகதிய 2323/40 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xii)    2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்தின் 09 ஆம் பிரிவின் கீழ் நலன்புரி நன்மைகள் தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு 2023 ஏப்ரல் 21 ஆம் திகதிய 2328/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அஷ்வசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுத் திட்டம்
(xiii)    சுங்கக் கட்டளைச் சட்டத்தின் (235 ஆம் அத்தியாயமான) 19(அ) ஆம் பிரிவின் கீழ் இறக்குமதிப் பொருட்கள் மீதான சுங்கத் தீர்வை வரி தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2023 மார்ச் 02 ஆம் திகதிய 2321/50 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ விஜித ஹேரத்                 -     மூன்று மனுக்கள்
(ii)    கௌரவ ரோஹண பண்டார                    
(iii)    கௌரவ (திருமதி) ராஜிகா விக்கிரமசிங்ஹ
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


கௌரவ சனாதிபதி அவர்களின் விசேட உரை

சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் மற்றும் பிற பொருளாதார காரணிகள் குறித்து கௌரவ ஜனாதிபதி அவர்கள் விசேட கூற்றொன்றினை முன்வைத்தார்.


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

(i)    கௌரவ சஜித் பிரேமதாச

சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம், உள்ளூர் கடன் மறுசீரமைப்பு போன்றன

(ii) கௌரவ அநுர திசாநாயக்க

பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்குதல் மற்றும் அதிபர் வெற்றிடங்களை நிரப்புதல்

மேற்சொன்ன வினாவிற்கு கௌரவ கல்வி அமைச்சர் பதிலளித்தார்.


சிறப்புரிமைகள்

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ செஹான் சேமசிங்க அவர்கள் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக 2023 மார்ச் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம், கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 118 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

((i) மற்றும் (iii) முதல் (xv) வரை கீழே காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன. (ii) ஆம் இலக்க விடயம் விவாதிக்கப்பட்டு நாளை வரை ஒத்திவைக்கப்பட்டதுடன் (xvi) மற்றும் (xvii) ஆம் இலக்க விடயங்கள் சட்டவாக்க நிலையியற் குழுவிற்கு ஆற்றப்படுத்தப்பட்டன:-

(i)    அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம்
(ii)    இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்கான தீர்மானம்
(iii)    நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை (2021)
(iv)    இலங்கை போக்குவரத்துச் சபையின் வருடாந்த அறிக்கை (2019)
(v)    ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை (2021)
(vi)    நெல் சந்தைப்படுத்தல் சபையின் வருடாந்த அறிக்கை (2016)
(vii)    நெல் சந்தைப்படுத்தல் சபையின் வருடாந்த அறிக்கை (2019)
(viii)    இலங்கை தேயிலைச் சபையின் வருடாந்த அறிக்கை (2020)
(ix)    பனை அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கை (2016)
(x)    பனை அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கை (2017)
(xi)    தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை (2020)
(xii)    களுபோவிட்டியான தேயிலைத் தொழிற்சாலை கம்பெனி லிமிடட்டின் வருடாந்த அறிக்கை (2019/2020)
(xiii)    வரையறுக்கப்பட்ட இலங்கை நிலக்கரி (தனியார்) கம்பனியின் வருடாந்த அறிக்கை (2017)
(xiv)    வரையறுக்கப்பட்ட இலங்கை நிலக்கரி (தனியார்) கம்பனியின் வருடாந்த அறிக்கை (2020)
(xv)    வரையறுக்கப்பட்ட இலங்கை அணுசக்தி சபையின் வருடாந்த அறிக்கை (2019)
(xvi)    களனி பௌத்த மகளிர் தருமச் சங்கம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(xvii)    இலங்கை வரிவிதிப்பு நிறுவகம் (கூட்டிணைத்தல்) (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு


ஒத்திவைப்பு நேரத்தின் போதான  கேள்விகள்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i)    கௌரவ இம்ரான் மஹ்ரூப்
(ii)    கௌரவ அகில எல்லாவல


அதனையடுத்து, 1811 மணியளவில் பாராளுமன்றமானது 2023 ஏப்ரல் 27ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom