2023 ஏப்ரல் 04ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2023-04-04 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : “இலங்கை மத்திய வங்கி” சட்டமூலம் சம்பந்தமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
B : 2022.07.20 ஆம் திகதி நடாத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பின்போது உபயோகிக்கப்பட்ட வாக்களிப்புச் சீட்டுக்கள்
C : “ஷைலி கல்விசார் மன்றம் (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றவுள்ள மேலதிக உறுப்பினர்கள்
D : “இலங்கை பட்டயப் போக்குவரத்து நிறுவனம் (கூட்டிணைத்தல்) (திருத்தம்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றவுள்ள மேலதிக உறுப்பினர்கள்
E : தெரிவுக் குழுவின் கூட்டம்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் ─ 2021 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் XXIX ஆம் பகுதியையும் மற்றும் ஐந்தாவது தொகுதியின் IX ஆம் பகுதி
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை
(ii) 2020 ஆம் ஆண்டுக்கான பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மனிதப் பண்பியல் மற்றும் சமூக விஞ்ஞானக் கற்கைகளுக்கான பட்ட மேற்படிப்பு நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(iii) 2020 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பட்டப்பின் படிப்பு நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(iv) 2020 ஆம் ஆண்டுக்கான கொழும்புப் பல்கலைக்கழகத்தின் கமத்தொழில் தொழில்நுட்பவியல் மற்றும் கிராமிய விஞ்ஞானங்களுக்கான நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(v) 2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(vi) 2021 ஆம் ஆண்டுக்கான கட்புல அரங்கக் கலைப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
(vii) 2021 ஆம் ஆண்டுக்கான கம்பஹா விக்ரமாராச்சி சுதேச மருத்துவப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்கும்
(viii) 2021 ஆம் ஆண்டுக்கான தேசிய வியாபார முகாமை நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(ix) 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
(x) 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் ஆங்கில பட்டப்பின்படிப்பு நிறுவகத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும்
(xi) 2021 ஆம் ஆண்டுக்கான பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விவசாயப் பட்டப்பின்படிப்பு நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(xii) 2021 ஆம் ஆண்டுக்கான மருத்துவப் பட்டப்பின்படிப்பு நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
(xiii) 2021 ஆம் ஆண்டுக்கான கொழும்புப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
(xiv) 2021 ஆம் ஆண்டுக்கான பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பட்டப்பின்படிப்பு நிறுவகத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும்
(xv) 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
(xvi) 2021 ஆம் ஆண்டுக்கான கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சுதேச மருத்துவ பட்டப்பின்படிப்பு நிறுவகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்
(xvii) 2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(xviii) 2021 ஆம் ஆண்டுக்கான விஜய குமாரதுங்க நினைவு மருத்துவமனையின் ஆண்டறிக்கை
(xix) 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(xx) 2021 ஆம் ஆண்டுக்கான புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகாரசபையின் ஆண்டறிக்கை
(xxi) 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஹதபிம அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை
(xxii) 2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை கைப்பணிகள் சபையின் ஆண்டறிக்கை
(xxiii) 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை மட்பாண்டக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கைகள்
(xxiv) 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14 ஆம் பிரிவின் கீழ் செஸ் வரி தொடர்பில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2023 சனவரி 01 ஆம் திகதிய 2312/76 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xxv) 2022 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2023.02.01 முதல் 2023.02.28 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு
(xxvi) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பெருந்தோட்ட அமைச்சு மற்றும் இறப்பர் அபிவிருத்தித் திணைக்களம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகள்
(xxvii) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் புத்தசாசனம், மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xxviii) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் வலுசக்தி பிரிவு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களுக்கு பதிலாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ ஜானக வக்கும்புர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் உறுப்பினர் கௌரவ சட்டத்தரணி மதுர விதானகே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ விதுர விக்ரமநாயக
(ii) கௌரவ பிரேமலால் ஜயசேக்கர
(iii) கௌரவ வாசுதேவ நாணாயக்கார - ஆறு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாச
செவனகல மற்றும் பெல்வத்த சீனித் தொழிற்சாலைகளை தனியார் மயப்படுத்தல்
மேற்சொன்ன வினாவிற்கு கௌரவ பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் பதிலளித்தார்.
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
ஸ்ரீலங்கா டெலிகொம் பிஎல்சி மற்றும் லங்கா ஹொஸ்பிடல்ஸ் பிஎல்சியை விற்பனை செய்ய அமைச்சரவை தீர்மானம் தொடர்பாக 2023.03.22 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் சார்பாக நிதி இராஜாங்க அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியம்பலாபிடிய அவர்கள் பதிலளித்தார்.
சிறப்புரிமைக் கேள்விகள்
(i) கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்துவதற்கான பணத்தை நிதி அமைச்சின் செயலாளர் வழங்காமை
(ii) கௌரவ (திருமதி) முதிதா பிரிஸான்தி
சப்ரகமுவ பிரதிப் பொலிஸ் மா அதிபர் தன்னுடன் மரியாதையற்ற முறையில் நடந்து கொள்ளல்
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க, பந்தய, சூதாட்ட விதிப்பனவுச் சட்டத்தைத் திருத்துவதற்காக
“பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்கள் பிரேரித்தார்.
கௌரவ பாராளுமன்ற சபை முதல்வர் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணையை சபை ஏற்றுக் கொண்டது-
இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்குப் பொருத்தமான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு
இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்குப் பொருத்தமான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவானது தன்னால் அவதானிக்கப்பட்ட விடயங்களை, 2022 திசம்பர் 13 ஆம் திகதி பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மூலமாக பணிக்கப்பட்ட கால எல்லைக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு மேலும் காலம் தேவைப்படுவதால் குறிப்பிட்ட விசேட குழுவிற்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள கால எல்லை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 102 இன் பிரகாரம் 2023 யூன் 21 ஆம் திகதி வரை கால நீடிப்பு செய்யபடுமாக
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ சட்டத்தரணி பிரேம்நாத் சி. தொலவத்த அவர்களுக்கு “தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 3 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை
(ii) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள்
ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i) கௌரவ வருண லியனகே
(ii) கௌரவ யூ.கே. சுமித் உடுகும்புர
அதனையடுத்து, 1649 மணியளவில் பாராளுமன்றமானது 2023 ஏப்ரல் 25ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






