இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2023 மார்ச் 08ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2023-03-08

கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2020 ஆம் ஆண்டுக்கான உள்ளூர் கடன்கள் மற்றும் அபிவிருத்தி நிதியத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்கும்
(ii)    2021 ஆம் ஆண்டுக்கான ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கையும் நிதிக்கூற்று அறிக்கைகளும்
(iii)    2014, 2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளுக்கான வ/ப திறன்கள் அபிவிருத்தி நிதியத்தின் வருடாந்த அறிக்கைகள்
(iv)    2020 ஆம் ஆண்டுக்கான  தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் ஆண்டறிக்கை

(v) 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14 ஆம் பிரிவின் கீழ் செஸ் வரியை திருத்துவது தொடர்பில், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2022 நவம்பர் 14 ஆம் திகதிய 2306/15 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில்  பிரசுரிக்கப்பட்ட  கட்டளை
(vi)    (அத்தியாயம் 235)  சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் இறக்குமதித் தீர்வை வரி தொடர்பான தீர்மானம்
    (2023 சனவரி 01 ஆம் திகதிய 2312/75 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை )
(vii)    அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளில் பொலன்னறுவை, மட்டக்களப்பு, புத்தளம், மன்னார், கண்டி, பதுளை, காலி, கொழும்பு, மாத்தறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டச் செயலகங்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகள்
(viii)    அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பதிவாளர் நாயகத் திணைக்களம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(ix)    சுங்கக் கட்டளைச் சட்டத்தின் (235 ஆம் அத்தியாயமான) 10(அ) ஆம் பிரிவின் கீழ் இறக்குமதிப் பொருட்கள் மீதான சுங்கத் தீர்வை மீதான மேலதிக கட்டண அறவீடு தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும்  தேசிய கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2022 நவம்பர் 30 ஆம் திகதிய 2308/16 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(x)    சுங்கக் கட்டளைச் சட்டத்தின் (235 ஆம் அத்தியாயமான) 10(அ) ஆம் பிரிவின் கீழ் இறக்குமதிப் பொருட்கள் மீதான சுங்கத் தீர்வை மீதான மேலதிக கட்டண அறவீடு தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும்  தேசிய கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2023  சனவரி 04 ஆம் திகதிய 2313/35 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    இலங்கையில் பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமைகள் மீறல்கள் குறித்து சிறப்பு  கவனம் செலுத்துவதன் மூலம் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்தல் பற்றி ஆராய்ந்து அதன் விதப்புரைகளை பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட தெரிகுழுவின் இடைக்கால அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (டாக்டர்) (திருமதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    ஒன்பதாவது பாராளுமன்றத்தின் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால தேசிய கொள்கைகளை வகுப்பதில் முன்னுரிமைகளை அடையாளம் காணல் பற்றிய தேசிய சபை உபகுழுவின் தேசிய கொள்கை ஆணைக்குழுவொன்றை தாபித்தல் பற்றிய அறிக்கை அக்குழுவின் உறுப்பினர் கௌரவ சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ சாரதீ துஷ்மந்த
(ii)    கௌரவ மாயாதுன்ன சிந்தக அமல்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

(i)    கௌரவ சஜித் பிரேமதாச

மின் கட்டண உயர்வு தொடர்பான பிரச்சினைகள்

மேற்சொன்ன வினாவிற்கு கௌரவ மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.

(ii) கௌரவ (வண.) அதுரலியே ரதன தேரர்

சட்டக் கல்லூரி மொழிப் பிரச்சினை

மேற்சொன்ன வினாவிற்கு கௌரவ நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.


சிறப்புரிமைகள்

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சட்டத்தரணி பிரேம்நாத் சி. தொலவத்த அவர்கள் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக 2023 மார்ச் 07 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம், கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 118 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1முதல் 34 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டதுடன் 34ஆம் இலக்க விடயம் சட்டவாக்க நிலையியற் குழுவிற்கு ஆற்றப்படுத்தப்பட்டது:-

(i)    அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம்
(ii)    மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவித்தல்
(iii)    இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஆறு ஒழுங்குவிதிகள்
(iv)    கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச்  சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(v)    களனி பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும் (2020)
(vi)    இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும் (2019)
(vii)    இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும் (2018)
(viii)    தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை (2018)
(ix)    இலங்கை நீதிபதிகள் நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை (2018)
(x)    மீயுயர் நீதிமன்றங்களின் கட்டிடத் தொகுதி முகாமை சபையின் வருடாந்த அறிக்கை (2021)
(xi)    வரையறுக்கப்பட்ட இலங்கை சீனி (தனியார்) கம்பனியின் வருடாந்த அறிக்கை (2013)
(xii)    வரையறுக்கப்பட்ட இலங்கை சீனி (தனியார்) கம்பனியின் வருடாந்த அறிக்கை (2014)
(xiii)    பனை அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கை (2013)
(xiv)    பனை அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கை (2014)
(xv)    பனை அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கை (2015)
(xvi)    துருசவிய நிதியத்தின் வருடாந்த அறிக்கை (2015)
(xvii)    துருசவிய நிதியத்தின் வருடாந்த அறிக்கை (2019)
(xviii)    துருசவிய நிதியத்தின் வருடாந்த அறிக்கை (2020)
(xix)    தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை (2017)
(xx)    தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை (2019)
(xxi)    இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும் (2017)
(xxii)    தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை (2019)
(xxiii)    வரையறுக்கப்பட்ட குருணாகல் பெருந்தோட்டக் கம்பனியின் வருடாந்த அறிக்கை (2019)
(xxiv)    சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை (2019)
(xxv)    சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை (2020)
(xxvi)    இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை (2020)
(xxvii)    தேசிய விளையாட்டு நிதியத்தின் வருடாந்த அறிக்கை (2017)
(xxviii)    தேசிய விளையாட்டு நிதியத்தின் வருடாந்த அறிக்கை (2019)
(xxix)    இந்திரா புற்றுநோய் நம்பிக்கைப் பொறுப்பு (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு


ஒத்திவைப்பு நேரத்தின் போதான  கேள்விகள்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i)    கௌரவ இம்தியாஸ் பாகிர் மாகார்
(ii)    கௌரவ எம்.டப்ளியூ.டி. சஹன் பிரதீப் விதான


அதனையடுத்து, 1738 மணியளவில் பாராளுமன்றமானது 2023 மார்ச் 09ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom