இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2023 பெப்ரவரி 24ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2023-02-24

கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : “உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தம்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றவுள்ள மேலதிக உறுப்பினர்கள்
B : “உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தம்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றவுள்ள மேலதிக உறுப்பினர்கள்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம், 2021 ஆம் ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் XXVIII ஆம் பகுதியையும்,  நான்காம் தொகுதியின் XXI மற்றும் XXII ஆம் பகுதிகளையும் மற்றும் ஐந்தாம் தொகுதியின் V, VI, VII மற்றும் VIII ஆம் பகுதிகள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2020 ஆம் வருடத்திற்கான ஸ்ரீ ஜயவர்தனபுர பொது மருத்துவமனை மற்றும் முதுகலை பயிற்சி மையத்தின் ஆண்டறிக்கை
(ii)    2021 ஆம் வருடத்திற்கான தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகாரசபையின் ஆண்டறிக்கை

(iii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் (ஒம்புட்ஸ்மன்) அலுவலகம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பாக, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கை
(iv)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தோ்தல் ஆணைக்குழு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பாக, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கை
(v)    மின்சாரத் தொழிற்துறைக்கான பொதுக் கொள்கை வழிகாட்டுதல்களுக்கான திருத்தங்கள்-2022
(vi)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இலங்கைப் பாராளுமன்றம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பாக, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கை
(vii)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பாக, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கை
(viii)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பாக, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கை
(ix)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு, தொழில் திணைக்களம் அத்துடன் மனித வலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பாக, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    பாராளுமன்ற உறுப்பினர்களினதும் பாராளுமன்றத்தினதும் சிறப்புரிமைகள் மீறப்படுதல் தொடர்பில் விசாரிப்பதற்கும் அது தொடர்பில் பொருத்தமான விதப்புரைகளை சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சட்டத்தரணி நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    தொழிநுட்ப அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ கனக ஹேரத் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ சாந்த பண்டார                    
(ii)    கௌரவ அஸோக அபேசிங்ஹ                    
(iii)    கௌரவ நலீன் பண்டார ஜயமஹ
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


அனுதாபப் பிரேரணைகள்

பின்வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் மீது பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டன:-

(i) மறைந்த கௌரவ றொஹான் அபேகுணசேகர
(ii)    மறைந்த கௌரவ அப்துல் பாயிஸ் கமர்தீன்
(iii)    மறைந்த கௌரவ அதாவுத செனெவிரத்ன
(iv)    மறைந்த கௌரவ திஸ்ஸ ஆர் பலல்ல


அதனையடுத்து, 1622 மணியளவில் பாராளுமன்றமானது 2023 மார்ச் 07ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom