2023 பெப்ரவரி 23ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2023-02-23 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : சட்டமூலங்களின் பரிசீலனைக்கென சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றவுள்ள மேலதிக உறுப்பினர்கள்
B : இணைந்த விசேட பொதுக் கூட்டம்
C : தெரிவுக் குழுவின் கூட்டம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(469 ஆம் அத்தியாயமான) தாவர, விலங்கினப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2இ, 5 மற்றும் 5அ ஆகிய பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அக் கட்டளைச் சட்டத்தின் 71 ஆம் பிரிவின் கீழ் வனசீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2022 ஆகஸ்ட் 08 ஆம் திகதிய 2292/11ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன
(ii) கௌரவ கயந்த கருணாதிலக்க
(iii) கௌரவ அசங்க நவரத்ன
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 3 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டதுடன் 2 மற்றும் 3ஆம் இலக்க விடயங்கள் சட்டவாக்க நிலையியற் குழுவிற்கு ஆற்றப்படுத்தப்பட்டன:-
(i) அத்தியாவசிய பொதுமக்கள் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம்
(ii) இலங்கை கட்டிட சேவைகள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவகம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(iii) ரதன திஸ்ஸ சமாதான மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“இலங்கைக்கு வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் இரகசிய விஜயம்” தொடர்பாக ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ வாசுதேவ நாணாயக்கார அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1659 மணியளவில் பாராளுமன்றமானது 2023 பெப்ரவரி 24ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






