2023 பெப்ரவரி 10ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2023-02-10 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : தவிசாளர் குழாமில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய வியாபார முகாமை நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(ii) 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் ஆண்டறிக்கை.
(iii) 2021 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) கம்பனியின் ஆண்டறிக்கை
(iv) 2020 ஆம் ஆண்டுக்கான தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(v) 2020 ஆம் ஆண்டுக்கான சென்ட்ரெல் இன்ஜினியரிங் சேர்விஸெஸ் (ப்ரைவட்) லிமிற்றட்டின் வருடாந்த அறிக்கை
(vi) 2021 ஆம் ஆண்டுக்கான தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் ஆண்டறிக்கை
(vii) 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் 41(7) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய சட்டத்தின் 71 ஆம் பிரிவின் கீழ், கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு மற்றும் கம்பனிகள் பதிவாளர் தலைமைதிபதியுடனான கலந்தாலோசனையுடன் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2022 நவம்பர் 17 ஆம் திகதிய 2306/54 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(viii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 21 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 27(1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது இலங்கை, ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் உணவு விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் துறையொன்றை நிறுவுதல் தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2022 நவம்பர் 09 ஆம் திகதிய 2305/16 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(ix) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 21 ஆம் பிரிவு மற்றும் 139 பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 27(1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது இலங்கை, கொழும்பு பல்கலைக்கழகத்தில் தொடர்பாடல் மற்றும் ஆக்கவியல் கலைகள் துறையொன்றை நிறுவுதல் தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2022 டிசம்பர் 12 ஆம் திகதிய 2310/06 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 52(6) இன் கீழ் அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 52(6) இன் கீழ் “ரதனதிஸ்ஸ சமாதான மன்றம் (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலம் பற்றிய அறிக்கை கௌரவ அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
கௌரவ அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணைகளை சபை ஏற்றுக் கொண்டது-
(i) அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள்
பின்வருமாறு இருபத்து ஒன்பது (29) அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள், பெயர் குறிப்பிட்டு நியமிக்கப்படுமாக:-
1. பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
2. நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
3. தொழில்நுட்ப அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
4. மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
5. துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமானசேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
6. முதலீட்டு மேம்பாடு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
7. பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
8. கடற்றொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
9. கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
10. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
11. வெகுசன ஊடக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
12. சுகாதாரஅலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
13. கமத்தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
14. வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
15. நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
16. சுற்றுலாத்துறை மற்றும் காணி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
17. பெருந்தோட்டக் கைத்தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
18. கைத்தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
19. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
20. வெளிநாட்டலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
21. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
22. மின்சக்தி மற்றும் வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
23. சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
24. விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
25. நீர்ப்பாசன அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
26. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
27. பொதுமக்கள் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
28. வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
29. நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 112 இன் பிரகாரம், அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, ஒவ்வோர் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவும் அமைச்சரவையின் உரிய விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரவை அமைச்சர் அதன் தவிசாளராகவும், இராஜாங்க அமைச்சர், பிரதி அமைச்சர், மற்றும் தெரிவுக்குழுவினால் நியமிக்கப்படும் வேறு ஐந்து (5) பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக.
ஒவ்வொரு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினதும் கூட்ட நடப்பெண் மூன்று (3) உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும்.
(ii) சட்டவாக்க நிலையியற் குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 113 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக சட்டவாக்க நிலையியற் குழுவானது, தவிசாளராக பிரதிச் சபாநாயகரையும், குழுக்களின் பிரதித் தவிசாளர் மற்றும் தெரிவுக் குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்படும் மேலும் பதினைந்து (15) உறுப்பினர்களையும் கொண்டிருக்குமாக.
(iii) பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 115 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது, சபாநாயகரைத் தவிசாளராகவும் பிரதிச் சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர், பாராளுமன்றச் சபை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசான், எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் மற்றும் தெரிவுக்குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்படும் வேறு இருபத்தாறு (26) உறுப்பினர்களையும் கொண்டிருக்குமாக.
(iv) நிலையியற் கட்டளைகள் பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 116 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக நிலையியற் கட்டளைகள் பற்றிய குழுவானது, தவிசாளராக சபாநாயகரையும், பிரதிச் சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர் மற்றும் தெரிவுக் குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்படும் மேலும் ஒன்பது (9) உறுப்பினர்களையும் கொண்டிருக்குமாக.
(v) சபைக் குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 117 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக சபைக் குழுவானது, தவிசாளராகச் சபாநாயகரையும் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் மேலும் பதினான்கு (14) உறுப்பினர்களையும் கொண்டிருக்குமாக.
(vi) ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 118 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவானது, தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் பதினாறு (16) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக.
(vii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவானது, தெரிவுக் குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்படும் முப்பத்தொரு (31) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக.
(viii) அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 120 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவானது, தெரிவுக் குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்படும் முப்பத்தொரு (31) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக.
(ix) அரசாங்க நிதி பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 121 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக, அரசாங்க நிதி பற்றிய குழுவானது தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் இருபத்தெட்டு (28) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக.
(x) வங்கித்தொழில் மற்றும் நிதிச் சேவைகள் பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 122 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், ஒன்பதாவது பாராளுமன்றத்தில் நான்காவது கூட்டத்தொடரில் சேவையாற்றுவதற்காக வங்கித்தொழில் மற்றும் நிதிச் சேவைகள் பற்றிய குழுவானது தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் பதினேழு (17) பாராளுமன்ற உறுப்பினர்கைளக் கொண்டிருக்குமாக.
(xi) பொருளாதார உறுதிப்படுத்தல் பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 123 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், ஒன்பதாவது பாராளுமன்றத்தில் நான்காவது கூட்டத்தொடரில் சேவையாற்றுவதற்காக பொருளாதார உறுதிப்படுத்தல் பற்றிய குழுவானது தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் பதினேழு (17) பாராளுமன்ற உறுப்பினர்கைளக் கொண்டிருக்குமாக.
(xii) வழிவகைகள் பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 124 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், ஒன்பதாவது பாராளுமன்றத்தில் நான்காவது கூட்டத்தொடரில் சேவையாற்றுவதற்காக வழிவகைகள் பற்றிய குழுவானது தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் பதினேழு (17) பாராளுமன்ற உறுப்பினர்கைளக் கொண்டிருக்குமாக.
(xiii) பொது மனுக்கள் பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 125 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக பொது மனுக்கள் பற்றிய குழுவானது, தெரிவுக்குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்படும் இருபத்தி மூன்று (23) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக.
(xiv) பின்வரிசைக் குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 129 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக, பின்வரிசைக் குழுவானது அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசான், எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் மற்றும் தெரிவுக் குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்படும் அரசாங்கக் கட்சியின் எட்டு (8) பின்வரிசை உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சியின் எட்டு (8) பின்வரிசை உறுப்பிர்கள் ஆகியோரைக் கொண்டிருக்குமாக.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
• பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
• அரசாங்க நிதி பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
• பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ மைத்ரீபால சிறிசேன அவர்களுக்கு “சர்வதேச தேரவாத நிறுவன (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஒத்திவைப்புப் பிரேரணை
“இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 32(4) மற்றும் 33(அ) உறுப்புரைகளின் பிரகாரம் 2023 பெப்ரவரி 08 ஆம் திகதி கௌரவ ஜனாதிபதி முன்வைத்த அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம்” தொடர்பான ஒத்திவைக்கப்பட்ட விவாதம் தொடரப்பட்டு முடிவுறுத்தப்பட்டது.
அதனையடுத்து, 1657 மணியளவில் பாராளுமன்றமானது 2023 பெப்ரவரி 21ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






