இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2023 பெப்ரவரி 09ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2023-02-09

கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


புதிய உறுப்பினர்களின்  உறுதிப்பிரமாணம் அல்லது சத்தியப்பிரமாணம்

கௌரவ முஜிபுர் ரஹுமான் அவர்களின் இராஜினமா காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக கெளரவ அப்துல் ஹமீட் மொஹமட் பௌஸி அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக கெளரவ சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.


சனாதிபதியின் செய்திகள்

A : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்)


சபாநாயகரின் அறிவித்தல்கள்

B : “கப்பற்றொழில் முகவர்களுக்கு, சரக்களுப்புநர்க்கு, கலன்செயற்படுத்தாப் பொதுக்காவுநர்க்கு மற்றும் கொள்கலன் செயற்படுத்துநர்க்கு உரிமமளித்தல் (திருத்தம்)” சட்டமூலம் சம்பந்தமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
C : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை
(ii)    2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய மனிதவள அபிவிருத்தி சபையின் ஆண்டறிக்கை
(iii)    2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை வங்கியின் ஆண்டறிக்கை
(iv)    2021 ஆம் ஆண்டுக்கான ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தின் வருடாந்த அறிக்கை
(v)    2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை
(vi)    2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கான தேசிய ஆராய்ச்சி மன்றத்தின் வருடாந்த அறிக்கைகள்
(vii)    2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான ஹோட்டல் டிவலப்பர்ஸ் (லங்கா) லிமிடெட்  நிறுவனத்தின் வருடாந்த அறிக்கைகள்
(viii)    2020 ஆம் ஆண்டுக்கான கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் ஆண்டறிக்கை
(ix)    2021 ஆம் ஆண்டுக்கான செலெந்திவா இன்வெஸ்ட்மென்ட் லிட்டட்டின் வருடாந்த அறிக்கை
(x)    2020/2021 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(xi)    2020 ஆம் ஆண்டுக்கான செலசினெ தொலைக்காட்சி நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை
(xii)    2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை பத்திரிகைப் பேரவையின் ஆண்டறிக்கையும் கணக்குகள் கூற்றும்
(xiii)    2021 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட சுயாதீன தொலைக்காட்சி சேவையின் ஆண்டறிக்கை
(xiv)    2021 ஆம் ஆண்டுக்கான அரச அபிவிருத்தி நிருமாணக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை
(xv)    2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கான ஹோமியோபதி மருத்துவ சபையின் ஆண்டறிக்கைகள்
(xvi)    2020 ஆம் ஆண்டுக்கான புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகாரசபையின் ஆண்டறிக்கை
(xvii)    2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(xviii)    2019 ஆம் ஆண்டுக்கான கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையின் வருடாந்த அறிக்கை
(xix)    2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை நீதிபதிகள் நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை
(xx)    2021 ஆம் ஆண்டுக்கான தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xxi)    2019 ஆம் ஆண்டுக்கான கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(xxii)    2020 ஆம் ஆண்டுக்கான இறப்பர் அபிவிருத்தித் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xxiii)    2020 ஆம் ஆண்டுக்கான டவர் மண்டப அரங்க மன்றத்தின் ஆண்டறிக்கையும் நிதிசார் கூற்றுக்களும்
(xxiv)    2021 ஆம் ஆண்டுக்கான சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் மின்னுற்பத்தி கருத்திட்ட இராஜாங்க அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xxv)    2020 ஆம் ஆண்டுக்கான புவிச்சரிவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் வருடாந்த அறிக்கை

(xxvi) 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4(1) மற்றும் 14 ஆம் பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ்,  நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2023 சனவரி 01 ஆம் திகதிய 2312/77 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில்  பிரசுரிக்கப்பட்ட  ஒழுங்குவிதிகள்
(xxvii)    1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4(1), 6 மற்றும் 14 ஆம் பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ்,  நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2023 சனவரி 01 ஆம் திகதிய 2312/78 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில்  பிரசுரிக்கப்பட்ட  ஒழுங்குவிதிகள்
(xxviii)    அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் அமைச்சரவை அலுவலகம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xxix)    எதிர்வரும் தசாப்தத்தினை இலக்காகக் கொண்ட தேசிய வலுசக்தி சாத்தியவளங்கள், மூலோபாயங்கள் மற்றும் பாதை வரைபடம் தொடர்பான 2022 டிசம்பரில் வெளியிப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கை
(xxx)    2021 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2022.12.01 முதல் 2022.12.31 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு
(xxxi)    2015 ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடாத்தப்பட்ட இலங்கையின் பதினைந்தாவது பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான தேர்தல்கள் ஆணையாளரின் அறிக்கை
(xxxii)    சனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக 2019.11.16 ஆம் திகதி நடாத்தப்பட்ட தேர்தல் பற்றிய அறிக்கை
(xxxiii)    நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xxxiv)    (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவுகள் 44, 123, 124, 125, 126, 126ஆ, 128, 132, 132அ மற்றும் 231 ஆகிய பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 237 ஆம் பிரிவின் கீழ் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2022 ஒக்டோபர் 10 ஆம் திகதிய 2301/17 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித் திட்டங்களை அடையாளம் காணல் பற்றிய உபகுழுவினால் தேசிய பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட, அதன் இரண்டாவது அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாட்டளி சம்பிக்க ரணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


சிறப்புரிமைக் கேள்விகள்

கௌரவ நிமல் பியதிஸ்ஸ

நுவரெலியா ‘சென்பதி மெதுர’வில் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான லங்காதீப செய்தி அறிக்கை


கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணைகளை சபை ஏற்றுக் கொண்டது-

(i) தெரிவுக் குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 114 இன் ஏற்பாடுகளின் பிரகாரம், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரின் போது சேவையாற்றுவதற்காக தெரிவுக் குழுவானது, தவிசாளராக சபாநாயகரையும் பாராளுமன்றத்தினால் பெயர் குறித்து நியமிக்கப்படவேண்டிய அரசியல் கட்சிகளின் தலைவர்களையோ அல்லது அவர்களின் நியமத்தர்களையோ உள்ளடக்கிய பன்னிரண்டு (12) உறுப்பினர்களையும் கொண்டிருக்குமாக

(ii) தெரிவுக்குழு
இன்றைய தினம் பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையின் பிரகாரம், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரின் போது தெரிவுக் குழுவில் பின்வரும் உறுப்பினர்கள் சேவையாற்றுவார்களாக:—

கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த
கௌரவ பிரசன்ன ரணதுங்க
கௌரவ சட்டத்தரணி நிமல் சிறிபால த சில்வா
கௌரவ டக்ளஸ் தேவானந்தா
கௌரவ ஜோன்ஸ்டன் பர்னாந்து
கௌரவ காமினி லொக்குகே
கௌரவ சட்டத்தரணி சாகர காரியவசம்


சபாநாயகரின் அறிவித்தல்கள்

தெரிவுக் குழுவின் கூட்டம்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 52 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i)    நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் – அங்கீகரிப்பதற்கு
(ii)    இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை (2017)
(iii)    இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை (2018)
(iv)    இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை (2019)
(v)    தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை (2017)
(vi)    மனித வள அபிவிருத்திக்கான இலங்கை தேசிய சபையின் வருடாந்த அறிக்கை (2018)
(vii)    மனித வள அபிவிருத்திக்கான இலங்கை தேசிய சபையின் வருடாந்த அறிக்கை (2019)
(viii)    அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை (2017)
(ix)    அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை (2018)
(x)    அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை (2019)
(xi)    தொலைக் கல்வி நிலையத்தின் வருடாந்த அறிக்கை (2018)
(xii)    உள்ளக கடன் மற்றும் அபிவிருத்தி நிதியத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும் (2014)
(xiii)    உள்ளக கடன் மற்றும் அபிவிருத்தி நிதியத்தின் வருடாந்த அறிக்கைகளும் கணக்குகளும் (2015 மற்றும் 2016)
(xiv)    உள்ளக கடன் மற்றும் அபிவிருத்தி நிதியத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும் (2017)
(xv)    உள்ளக கடன் மற்றும் அபிவிருத்தி நிதியத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும் (2019)
(xvi)    உள்ளூர் ஆளுகை தொடர்பான இலங்கை நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை (2016)
(xvii)    உள்ளூர் ஆளுகை தொடர்பான இலங்கை நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை (2018)
(xviii)    கொழும்பு பல்கலைக்கழகத்தின் சுதேச மருத்துவ நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை (2020)
(xix)    பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விவசாய விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை (2020)
(xx)    ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை (2019)
(xxi)    இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும் (2019)
(xxii)    கொழும்பு பல்கலைக்கழகத்தின் நூலக மற்றும் தகவல் விஞ்ஞாபனங்களுக்கான தேசிய நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை (2020)
(xxiii)    மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப நிறுவனத்தின் வருடாந்த அறிக்கையும் வருடாந்த கணக்குகளும் (2020)
(xxiv)    மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கையும் நிதிக் கூற்றும் (2020)
(xxv)    இலங்கை துறைமுக அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை (2019)
(xxvi)    வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை (2017/2018)
(xxvii)    இலங்கை கடற்றொழில் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை (2013)
(xxviii)    இலங்கை கடற்றொழில் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை (2014)
(xxix)    இலங்கை கடற்றொழில் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை (2015)
(xxx)    இலங்கை கடற்றொழில் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை (2016)
(xxxi)    வரையறுக்கப்பட்ட சீநோர் நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை (2016)
(xxxii)    தேசிய நீர்வளங்கள் ஆய்வு மற்றும் அபிவிருத்தி முகவர் நிறுவனத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும் (2019)
(xxxiii)    தேசிய நீர்வளங்கள் ஆய்வு மற்றும் அபிவிருத்தி முகவர் நிறுவனத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும் (2020)
(xxxiv)    இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை (2018)
(xxxv)    இலங்கை பத்திரிகைப் பேரவையின் வருடாந்த அறிக்கையும் கணக்குக் கூற்றும் (2019)
(xxxvi)    இலங்கை நீதிபதிகள் நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை (2017)
(xxxvii)    குற்றத்தால் பலியானவர்களையும் மற்றும் சாட்சியாளர்களையும் பாதுகாப்பதற்கான தேசிய அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை (2020)
(xxxviii)    தேசிய வடிவமைப்பு நிலையத்தின் வருடாந்த அறிக்கை (2019)
(xxxix)    புடைவை மற்றும் ஆடை நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை (2018)
(xl)    டவர் மண்டப அரங்க மன்றத்தின் வருடாந்த அறிக்கையும் நிதிக்கூற்றுக்களும் (2017)
(xli)    டவர் மண்டப அரங்க மன்றத்தின் வருடாந்த அறிக்கையும் நிதிக்கூற்றுக்களும் (2018)
(xlii)    டவர் மண்டப அரங்க மன்றத்தின் வருடாந்த அறிக்கையும் நிதிக்கூற்றுக்களும் (2019)
(xliii)    மத்திய கலாசார நிதியத்தின் வருடாந்த அறிக்கை (2012)
(xliv)    மத்திய கலாசார நிதியத்தின் வருடாந்த அறிக்கை (2013)
(xlv)    மத்திய கலாசார நிதியத்தின் வருடாந்த அறிக்கை (2014)
(xlvi)    மத்திய கலாசார நிதியத்தின் வருடாந்த அறிக்கை (2015)
(xlvii)    மத்திய பொறியியல் சேவைகள் தனியார் நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை (2019)
(xlviii)    மத்திய பொறியியல் சேவைகள் தனியார் நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை (2018)
(xlix)    மத்திய பொறியியல் உசாத்துணைப் பணியகத்தின் வருடாந்த அறிக்கை (2018)
(l)    மத்திய பொறியியல் உசாத்துணைப் பணியகத்தின் வருடாந்த அறிக்கை (2015)
(li)    மத்திய பொறியியல் உசாத்துணைப் பணியகத்தின் வருடாந்த அறிக்கை (2013)
(lii)    தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வருடாந்த அறிக்கை (2019)


ஒத்திவைப்புப் பிரேரணை

“இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 32(4) மற்றும் 33(அ) உறுப்புரைகளின் பிரகாரம் 2023 பெப்ரவரி 08 ஆம் திகதி கௌரவ ஜனாதிபதி முன்வைத்த அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம்” தொடர்பாக ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ சஞ்ஜீவ எதிரிமான்ன அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1634 மணியளவில் பாராளுமன்றமானது 2023 பெப்ரவரி 10ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom