இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது

திகதி : 2023-02-08

  • அணிவகுப்பு மரியாதை மற்றும் வாகன பவனி இடம்பெறவில்லை

 

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது  கூட்டத்தொடர் ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் இன்று (2023.02.08) ஆரம்பித்துவைக்கப்பட்டது.

கூட்டத்தொடரை வைபவ ரீதியாக ஆரம்பித்துவைத்ததை அடுத்து அரசியலமைப்பின் 33வது உறுப்புரையில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்கள் மு.ப 10.00 மணியளவில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்து உரையாற்றினார்.

புதிய கூட்டத்தொடரை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வை எளிமையான வைபவமாக நடத்துவதற்கு ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் அவருடைய பாரியாரின் வருகையைத் தொடர்ந்து, பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களின் வருகை இடம்பெற்றதுடன், அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க மற்றும் முதற்பெண்மணியின் வருகை இடம்பெற்றது.

இதன்போது சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக பாராளுமன்ற கட்டடத்தின் பிரதான நுழைவாயிலின் படிக்கட்டுக்கு அருகில் கௌரவ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வரவேற்றனர்.

அதனையடுத்து, படைக்கலசேவிதர், பிரதி படைக்கல சேவிதர் மற்றும் உதவி படைக்கல சேவிதர் ஆகியோர் முன்செல்ல கௌரவ சபாநாயகர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோரினால் ஜனாதிபதி பாராளுமன்ற கட்டடத்துக்குள் அழைத்துச் செல்லப்பட்டார்.

அதன்போது, பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகே நாவல ஜனாதிபதி மகளிர் கல்லூரி மாணவியர் ஜயமங்கல கீதம் இசைத்தனர்.

அதன் பின்னர் உடையணி அறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜனாதிபதி அவர்கள் மு.ப 9.55 மணிவரை அங்கிருந்து, பாராம்பரியத்துக்கு அமையப் பிரதிப் படைக்கல சேவிதர், செங்கோலைக் கையில் தாங்கியவாறு படைக்கல சேவிதர், ஜனாதிபதி, சபாநாயகர், செயலாளர் குழு மற்றும் உதவிப் படைக்கல சேவிதர் என்ற வரிசைப்படி அணிவகுத்து சபா மண்டபத்துக்குள் பிரவேசித்தனர்.

சபா மண்டபத்துக்கு அழைத்துவரப்பட்ட ஜனாதிபதி அங்கிராசனத்தில் அமர்ந்து அரசாங்கத்தின் கொள்கைப்பிரகடனத்தை முன்வைத்தார். அதனையடுத்து 2023.02.09 ஆம் திகதி மு.ப. 9.30 மணிவரை சபை ஒத்திவைக்கப்பட்டது.

அதனையடுத்து இராஜதந்திரிகள் உள்ளிட்ட விருந்தினர்களுக்கு தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

[அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம்]

 

 

1 2

3 4

5 6

7 8

9 10

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom