2023 ஜனவரி 20ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2023-01-20 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்
B : இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்குப் பொருத்தமான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்
C : பாராளுமன்ற உறுப்பினர்களினதும் பாராளுமன்றத்தினதும் சிறப்புரிமைகள் மீறப்படுதல் தொடர்பில் விசாரிப்பதற்கும் அது தொடர்பில் பொருத்தமான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை
(ii) 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை
(iii) 2018 ஆம் ஆண்டுக்கான நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஆண்டறிக்கை
மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (52 ஆம் அத்தியாயமான), 25 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 32 ஆம் பிரிவின் கீழ் மென் மதுபான உரிமங்கள் தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2022 யூலை 28 ஆந் திகதிய 2290/24 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல்
(மதுவரி அறிவித்தல் இலக்கம் 05/2022)
(v) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 21 ஆம் பிரிவு மற்றும் 139 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 27(1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையுடன், இலங்கை றுகுணு பல்கலைக்கழகத்தில் விவசாய பொறியியல் பீடம் மற்றும் சுற்றாடல் தொழில்நுட்பம் துறையொன்றை நிறுவுதல் தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2022 செப்டெம்பர் 30 ஆம் திகதிய 2299/66 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(vi) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 21 ஆம் பிரிவுடன் சேரத்து வாசிக்கப்பட வேண்டிய 27(1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையுடன், இலங்கை சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தில் ஆரம்ப சிகிச்சை மற்றும் குடும்ப மருத்துவத் துறையொன்றை நிறுவுதல் தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2022 செப்டெம்பர் 30 ஆம் திகதிய 2299/67 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(vii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 21 ஆம் பிரிவு மற்றும் 139 ஆம் பிரிவுடன் சேரத்து வாசிக்கப்பட வேண்டிய 27(1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையுடன், இலங்கை றுகுணு பல்கலைக்கழகத்தில் விவசாய பொருளியல் மற்றும் விவசாய வியாபார துறையொன்றை நிறுவுதல் தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2022 ஒக்டோபர் 11 ஆம் திகதிய 2301/31 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(viii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 21 ஆம் பிரிவு மற்றும் 139 ஆம் பிரிவுடன் சேரத்து வாசிக்கப்பட வேண்டிய 27(1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையுடன், இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கணினியியல் துறையொன்றை நிறுவுதல் தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2022 ஒக்டோபர் 27 ஆம் திகதிய 2303/24 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடருக்கான அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவின் இரண்டாவது அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
கௌரவ தாரக்க பாலசூரிய
(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
அனுதாபப் பிரேரணைகள்
பின்வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் மீது பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டன:-
(i) மறைந்த கௌரவ உபாலி தசநாயக்க
(ii) மறைந்த கௌரவ (டாக்டர்) நெவில் பர்னாந்து
(iii) மறைந்த கௌரவ குணரத்ன வீரக்கோன்
(iv) மறைந்த கௌரவ ராஜா கொள்ளுரே
அதனையடுத்து, 1233 மணியளவில் பாராளுமன்றமானது 2023 பெப்ரவரி 7ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






