இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2023 ஜனவரி 19ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2023-01-19

பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமான கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -
•    2017 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XXIX ஆம் பகுதியையும் ;
•    2018 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XLIV ஆம் பகுதியையும், மூன்றாவது தொகுதியின் XVIII ஆம் பகுதியையும், ஒன்பதாவது தொகுதியின் XXXV மற்றும் XXXVI ஆம் பகுதிகளையும்;
•    2019 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XLII மற்றும் XLIII ஆம் பகுதிகளையும் மற்றும் மூன்றாவது தொகுதியின் XVI மற்றும் XVII, ஆம் பகுதிகளையும்;
•    2020 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXXIX, XL மற்றும் XLI ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் XIX ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XXIX, XXX, XXXI, XXXII மற்றும் XXXIII ஆம் பகுதிகளையும்; மற்றும்
•    2021 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XX, XXI, XXII, XXIII, XXIV, XXV, XXVI மற்றும் XXVII ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் XI, XII மற்றும் XIII ஆம் பகுதிகளையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XIV, XV, XVI, XVII, XVIII, XIX மற்றும் XX ஆம் பகுதிகள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை இணக்கப்பாட்டுப் பணியகத்தின் வருடாந்த அறிக்கை


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாச

பழங்குடியின மக்கள் தொடர்பான பிரச்சினைகள்

மேற்சொன்ன வினாவிற்கு கௌரவ புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல் மற்றும் சிரமங்கள் தொடர்பாக கூற்றொன்றினை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன அவர்கள் முன்வைத்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 4 ஆம் விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன.:-
(i)    தோ்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்துதல் சட்டமூலம் - திருத்தங்களுடன் - மூன்றாம் மதிப்பீடு மீது வாக்கெடுப்பு (ஆதரவாக 97; எதிராக 36)
(ii)    அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம்
(iii)    2019 நவம்பர் தொடக்கம் இன்று வரையிலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பின்னடைவு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும் அது தொடர்பில் தமது முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு
(iv)    இலங்கையில் சிறுவர்களின் போசாக்கின்மை அதிகரித்து வருகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கும், அவ்வாறாயின் அது சம்பந்தமாக மேற்கொள்ள வேண்டிய குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கும், அடையாளங் காணப்பட்ட நடவடிக்கைகளை துரிதமாக செயற்படுத்துவது தொடர்பில் மேற்பார்வை செய்வதற்குமான பாராளுமன்ற விசேட குழு


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“பரீட்சை மற்றும் பயிற்சிநெறி மூலம் பட்டதாரி ஆசிரியர் நியமனம்” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ உபுல் மஹேந்திர ராஜபக்ஷ அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1810 மணியளவில் பாராளுமன்றமானது 2023 ஜனவரி 20ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom