2023 ஜனவரி 18ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2023-01-18 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்
B : கௌரவ சபாநாயகருடனான கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம், தேசிய கணக்காய்வு அலுவலகத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ள, மாகாண சபைகள் திணைக்களங்கள் தொடர்பாக 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 14 ஆவது பிரிவின் பிரகாரம், கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கையின் பதினோராவது தொகுதியின் 05 ஆம் பகுதி
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கான தேசிய கல்வி ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கைகள்
(ii) 2020 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை
(iii) 2017/2018 மற்றும் 2018/2019 ஆம் ஆண்டுகளுக்கான கஹடகஹ கிறபைட் லங்கா லிமிடெட்டின் ஆண்டறிக்கைகள்
(iv) 2021 ஆம் ஆண்டுக்கான சிரம வாசனா நிதியத்தின் ஆண்டறிக்கை
(v) 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க, அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, 2023 சனவரி 17 ஆம் திகதிய 2315/07 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் மற்றும் அதன் அட்டவணையில் பிரசுரிக்கப்பட்ட பிரகடனம்
(vi) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் ஔடத உற்பத்திகள், வழங்கல்கள் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சனாதிபதி சட்டத்தரணி (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
கௌரவ வஜிர அபேவர்தன
(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ (வண.) அதுரலியே ரதன தேரர்
சுதந்திர தின விழாவை நடத்தாதிருத்தல்
மேற்சொன்ன வினாவிற்கு கௌரவ பிரதம அமைச்சர் மற்றும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் மற்றும் கௌரவ உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ஆகியோர் பதிலளித்தனர்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 24 ஆம் விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன.:-
(i) இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் கீழ் தீர்மானம்
(ii) புனர்வாழ்வுப் பணியகம் சட்டமூலம் - திருத்தங்களுடன் - இரண்டாம் மதிப்பீடு மீது வாக்கெடுப்பு (ஆதரவாக 23; எதிராக 06)
(iii) சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை (2019)
(iv) சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை (2018)
(v) தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை (2019)
(vi) இலங்கை அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை (2018)
(vii) ஹோமியோபதி மருத்துவ மன்றத்தின் வருடாந்த அறிக்கை (2017)
(viii) மதுபானங்கள் மீதான தேசிய அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை (2019)
(ix) இலங்கை மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை (2018)
(x) இலங்கை அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை (2020)
(xi) தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை (2016)
(xii) ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை (2020)
(xiii) அரச மரக்கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை (2019)
(xiv) அரச மரக்கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை (2020)
(xv) இலங்கை மாநாட்டுப் பணியகத்தின் வருடாந்த அறிக்கை (2014)
(xvi) இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் வருடாந்த அறிக்கை (2016)
(xvii) தேசிய தாவரவியல் பூங்கா அறக்கட்டளை நிதியத்தின் வருடாந்த அறிக்கை (2017)
(xviii) இலங்கை சுற்றுலா அபிவிருத்தி நிதியத்தின் வருடாந்த அறிக்கை (2017)
(xix) இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை (2019)
(xx) இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் வருடாந்த அறிக்கை (2019)
(xxi) இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை (2019)
(xxii) இலங்கை மாநாட்டுப் பணியகத்தின் வருடாந்த அறிக்கை (2020)
(xxiii) இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை (2020)
(xxiv) மஹபொல உயர் கல்வி புலமைப் பரிசில் நம்பிக்கை நிதியத்தின் வருடாந்த அறிக்கை (2020)
ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்
கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிபிட்டிய அவர்களினால் வினாவொன்று கேட்கப்பட்டது.
அதனையடுத்து, 1708 மணியளவில் பாராளுமன்றமானது 2023 ஜனவரி 19ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






