2023 ஜனவரி 05ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2023-01-05 |
பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமான கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சனாதிபதியின் செய்திகள்
A : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்)
சபாநாயகரின் அறிவித்தல்கள்
B : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்
C : உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதி கிடைக்கப் பெறல்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2021 ஆம் ஆண்டுக்கான தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(ii) 2015, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கான தேசிய பயிலுநர் கைத்தொழிற்பயிற்சி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கைகள்
(iii) 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கான மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கைகள்
(iv) 2020 ஆம் ஆண்டுக்கான நவீன தொழில்நுட்பவியலுக்கான ஆதர் சி. கிளார்க் நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
(v) 2020 ஆம் ஆண்டுக்கான களனிப் பல்கலைக்கழகத்தின் பாளி, பௌத்த கல்வி பட்டப்பின்படிப்பு நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(vi) 2020 ஆம் ஆண்டுக்கான பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பட்டப்பின்படிப்பு நிறுவகத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும்
(vii) 2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை பிக்கு பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
(viii) 2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
(ix) 2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
(x) 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்கான ஹோடெல் டிவலொப்பர்ஸ் (லங்கா) பீஎல்சியின் வருடாந்த அறிக்கைள்
(xi) 2018 ஆம் ஆண்டுக்கான தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் ஆண்டறிக்கை
(xii) 2019/2020 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(xiii) 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஆண்டறிக்கை
(xiv) 2019 ஆம் ஆண்டுக்கான செலசினெ தொலைக்காட்சி நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை
(xv) 2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை போக்குவரத்துச் சபையின் ஆண்டறிக்கை
(xvi) 2021 ஆம் ஆண்டுக்கான நீர் வளச் சபையின் வருடாந்த அறிக்கை
(xvii) 2020 ஆம் ஆண்டுக்கான ஆயுர்வேத திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xviii) 2019/2020 ஆம் ஆண்டுக்கான வ/ப கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனியின் வருடாந்த அறிக்கை
(xix) 2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை விவசாய ஆராய்ச்சிக் கொள்கைக்கான சபையின் வருடாந்த அறிக்கை
(xx) 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய அறுவடைக்கு பிந்திய முகாமைத்துவ நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(xxi) 2021 ஆம் ஆண்டுக்கான மீயுயர் நீதிமன்றங்களின் கட்டிடத் தொகுதி முகாமை சபையின் வருடாந்த அறிக்கை
(xxii) 2021 ஆம் ஆண்டுக்கான சட்டமா அதிபதி திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xxiii) 2021 ஆம் ஆண்டுக்கான சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xxiv) 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(xxv) 2017 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை நிலக்கரி (தனியார்) நிறுவனத்தின் ஆண்டறிக்கைகள்
(xxvi) 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4(1) மற்றும் 14 ஆம் பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ், நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2022 நவம்பர் 23 ஆம் திகதிய 2307/12 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xxvii) 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4(1) மற்றும் 14 ஆம் பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ், நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2022 டிசம்பர் 01 ஆம் திகதிய 2308/26 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xxviii) 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, அந்நியச் செலவாணி சட்டத்தின் 7 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 29 ஆம் பிரிவின் கீழ் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2022 டிசம்பர் 02 ஆம் திகதிய 2308/51 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xxix) அராசாங்க பொறுப்பு முயற்சிகள் குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சினால் இலங்கை சமூக பாதுகாப்புச் சபை தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 120(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xxx) 2021 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2022.11.01 முதல் 2022.11.30 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு
(xxxi) 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க, அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, 2023 சனவரி 03 ஆம் திகதிய 2313/25 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் மற்றும் அதன் அட்டவணையில் பிரசுரிக்கப்பட்ட பிரகடனம்
(xxxii) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பாராளுமன்றச் சபைமுதல்வரின் அலுவலகம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xxxiii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 21 ஆம் பிரிவு மற்றும் 139 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 27(1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையுடன் இலங்கை, ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கணினியியல் துறையில் விஞ்ஞான கணனியியல் துறை, தகவல் முறைமைகள் பொறியியல் மற்றும் தகவலியியல் துறை மற்றும் அறிவுப் பொறியியல் மற்றும் தொடர்பாடல் துறை ஆகியவற்றை நிறுவுதல் தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2022 யூன் 22 ஆம் திகதிய 2285/09 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xxxiv) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 21 ஆம் பிரிவு மற்றும் 139 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 27(1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையுடன் இலங்கை, மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலைப் பீடத்தில் வசதிகள் முகாமைத்துவ திணைக்களத்தினை நிறுவுதல் தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2022 யூலை 28 ஆம் திகதிய 2290/30 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xxxv) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின் கீழ், சேஜிஸ் கம்பஸ் (பிறைவேட்) லிமிடெட் நிறுவனத்தினால் வழங்கப்படும் கணினி விஞ்ஞானம், மென்பொருள் பொறியியல் மற்றும் கணினி தகவல் தொழிநுட்பவியல் ஆகியவற்றில் இளமாணி சிறப்புப் பட்டங்கள் தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2022 பெப்ரவரி 25 ஆம் திகதிய 2268/88 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xxxvi) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 27(1)(ஆ) ஆம் பிரிவின் கீழ் இலங்கை இரசாயனவியல் நிறுவகத்தினால் வழங்கப்படுகின்ற இரசாயன விஞ்ஞான இளமாணி சிறப்புப் பட்டம், ஈசொப்ட் மெட்ரோ கெம்பஸ் (பிறைவேட்) லிமிடெட்டினால் வழங்கப்படுகின்ற வியாபார முகாமைத்துவத்தில் இளமாணி, இலங்கை தகவல் தொழில்நுட்பவியல் நிறுவகத்தினால் (உத்தரவாதம்) வழங்கப்படும் கணினி விஞ்ஞானத்தில் கௌரவ விஞ்ஞான இளமாணி மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சிறப்பு கல்வியியல் இளமாணி மற்றும் சேஜிஸ் கம்பஸ் (பிறைவேட்) லிமிடெட் நிறுவனத்தினால் வழங்கப்படும் ஆங்கிலத்தில் இளமாணி மற்றும் அந்நிறுவனத்தினால் குறித்துரைக்கப்பட்ட பட்டத்தை வழங்குவதற்காக சுருக்கப் பெயருக்கான திருத்தமொன்று தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2022 ஆகஸ்ட் 17 ஆம் திகதிய 2293/25 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள்
(xxxvii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 27(1)(ஆ) ஆம் பிரிவின் கீழ், நஷனல் ஸ்கூல்ஒப் பிஸ்னஸ் மெனேஜ்மென்ட் லிமிடெட் நிறுவனத்தினால் வழங்கப்படும் முகாமைத்துவத்தில் கலாநிதிப் பட்டம் தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2022 ஆகஸ்ட் 25 ஆம் திகதிய 2294/52 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xxxviii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின் கீழ், எஸ்எல்ரி கம்பஸ் (பிறைவேட்) லிமிடெட் நிறுவனத்தினால் வழங்கப்படும் ஆடைவடிவமைப்பு வாணிபப் பொருள் முகாமைத்துவத்தில் விஞ்ஞான இளமாணி மற்றும் பிரயோக தகவல் தொழிநுட்பவியல் இளமாணி தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2022 செப்டெம்பர் 07 ஆம் திகதிய 2296/08 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xxxix) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 27(1)(ஆ) ஆம் பிரிவின் கீழ் பெனடிக்ட் XVI கத்தோலிக்க உயர்கல்வி றிறுவனம் (பிறைவேட்) லிமிடெட்டினால் வழங்கப்படுகின்ற மென்பொருள் பொறியியலில் கௌரவ விஞ்ஞான இளமாணி, சினெக் கெம்பஸ் (பிறைவேட்) லிமிடெட் நிறுவனத்தினால் வழங்கப்படும் கணக்கியலில் வணிக முகாமைத்துவத்தில் கௌரவ இளமாணி, சேஜிஸ் கம்பஸ் (பிறைவேட்) லிமிடெட் நிறுவனத்தினால் வழங்கப்படும் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவத்தில் வணிக முகாமைத்துவ கௌரவ இளமாணி மற்றும் நாகானந்த இன்டநஷனல் இன்ஸ்டிடியூட் வோர் புடிஸ்ட் ஸ்டடிஸ் (பிறைவேட்) லிமிடெட் நிறுவனத்தினால் வழங்கப்படும் தகவல் தொழில்நுட்பத்தில் கௌரவ விஞ்ஞான இளமாணி தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2022 ஒக்டோபர் 10 ஆம் திகதிய 2301/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள்
(xl) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 27(1)(ஆ) ஆம் பிரிவின் கீழ் இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவகத்தினால் வழங்கப்படுகின்ற கௌரவ பிரயோகக் கணக்கியல் இளமாணி மற்றும் பிரயோகக் கணக்கியல் இளமாணி, இன்டநஷனல் கொலிஜ் ஒப் பிஸ்னஸ் அன்ட் டெக்னொலொஜி லிமிடெட்டினல் வழங்கப்படும் மென்பொருள் பொறியியல் கௌரவ விஞ்ஞான இளமாணி, இலங்கை தகவல் தொழில்நுட்பவியல் நிறுவகத்தினால் (உத்தரவாதம்) வழங்கப்படும் கணினி முறைமை பொறியியலில் கௌரவ விஞ்ஞான இளமாணி மற்றும் வணிக நிர்வாகத்தில் கலாநிதி மற்றும் நஷனல் ஸ்கூல்ஒப் பிஸ்னஸ் மெனேஜ்மென்ட் லிமிடெட் நிறுவனத்தினால் வழங்கப்படும் வியாபாரப் பகுப்பாய்வில் கௌரவ முகாமைத்துவ இளமாணி மற்றும் பிரயோகப் பொருளியலில் கௌரவ முகாமைத்துவ இளமாணி தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2022 ஒக்டோபர் 19 ஆம் திகதிய 2302/17 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள்
(xli) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பாராளுமன்ற அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அலுவலகம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xlii) 1975 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, இலங்கைத் தேயிலைச் சபைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 25 ஆம் பிரிவின் கீழான இலங்கைத் தேயிலைச் சபையினால் ஆக்கப்பட்டு பெருந்தோட்டத் தொழில் அமைச்சரினால் அங்கீகரிக்கப்பட்டு, 2021 செப்டெம்பர் 17 ஆம் திகதிய 2245/29 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xliii) 1975 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, இலங்கைத் தேயிலைச் சபைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 25 ஆம் பிரிவின் கீழான இலங்கைத் தேயிலைச் சபையினால் ஆக்கப்பட்டு பெருந்தோட்டத் தொழில் அமைச்சரினால் அங்கீகரிக்கப்பட்டு, 2021 ஒக்டோபர் 06 ஆம் திகதிய 2248/36 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xliv) 1975 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, இலங்கைத் தேயிலைச் சபைச் சட்டத்தின் 4(2)(ஊ) மற்றும் 8(1) ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 25 ஆம் பிரிவின் கீழான இலங்கைத் தேயிலைச் சபையினால் ஆக்கப்பட்டு பெருந்தோட்டத் தொழில் அமைச்சரினால் அங்கீகரிக்கப்பட்டு, 2021 ஒக்டோபர் 06 ஆம் திகதிய 2248/37 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xlv) 1975 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, இலங்கைத் தேயிலைச் சபைச் சட்டத்தின் 25 ஆம் பிரிவின் கீழான இலங்கைத் தேயிலைச் சபையினால் ஆக்கப்பட்டு பெருந்தோட்டத் தொழில் அமைச்சரினால் அங்கீகரிக்கப்பட்டு, 2021 டிசம்பர் 14 ஆம் திகதிய 2258/14 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xlvi) 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க, கம்பனிகள் சட்டத்தின் 477 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 527 ஆம் பிரிவின் கீழ் மற்றும் 2005 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க சங்கங்கள் கட்டளைச் சட்டத்துடன் (திருத்தியமைக்கப்பட்ட) வாசிக்கப்பட வேண்டிய 1891 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க சங்கங்கள் கட்டளைச் சட்டத்தின் (123 ஆம் அத்தியாயம்) 19 ஆம் பிரிவின் கீழ் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரினால் விதிக்கப்பட்டு 2022 ஒக்டோபர் 25 ஆம் திகதிய 2303/07 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள்
பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 52(6) இன் கீழ் அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) பாராளுமன்ற நிலையியற் கட்டளை 52(6) இன் கீழ் “உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தம்)” எனும் சட்டமூலம் பற்றிய அறிக்கை (அறிக்கை 1) கௌரவ பிரதம அமைச்சர் மற்றும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) பாராளுமன்ற நிலையியற் கட்டளை 52(6) இன் கீழ் “உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தம்)” எனும் சட்டமூலம் பற்றிய அறிக்கை (அறிக்கை 2) கௌரவ பிரதம அமைச்சர் மற்றும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சனாதிபதி சட்டத்தரணி (கலாநிதி) விஜயதாஸ ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ அநுராத ஜயரத்ன
(ii) கௌரவ சட்டத்தரணி சந்திம வீரக்கொடி
(iii) கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன - இரண்டு மனுக்கள்
(iv) கௌரவ ஜகத் குமார சுமித்ராரச்சி
(v) கௌரவ சட்டத்தரணி மதுர விதானகே
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாச
ஆசிரியர் ஆலோசனை சேவைகள் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள்
மேற்சொன்ன வினாவிற்கு கல்வி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
நுகர்வுப் பொருட்களின் விலை, இறக்குமதி மற்றும் இதரவை தொடர்பாக கூற்றொன்றினை வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர், கௌரவ நலின் பிரனாந்து அவர்கள் முன்வைத்தார்.
சிறப்புரிமைக் கேள்விகள்
(i) கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண
செலுத்தப்பட வேண்டிய மின் கட்டணம் தொகை தொடர்பான ஊடக அறிக்கைகள்
(ii) கௌரவ (திருமதி) கோகிலா குணவர்தன
மே 9ஆம் தேதி போராட்டக்காரர்களால் தீவைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்களுக்கான இழப்பீட்டுத் தொகை
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
1972 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, கப்பற்றொழில் முகவர்களுக்கு, சரக்கனுப்புநர்க்கு, கலன்செயற்படுத்தாப் பொதுக்காவுநர்க்கு மற்றும் கொள்கலன் செயற்படுத்துநர்க்கு உரிமமளித்தல் சட்டத்தினைத் திருத்துவதற்காக
“கப்பற்றொழில் முகவர்களுக்கு, சரக்கனுப்புநர்க்கு, கலன்செயற்படுத்தாப் பொதுக்காவுநர்க்கு மற்றும் கொள்கலன் செயற்படுத்துநர்க்கு உரிமமளித்தல் (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்கள் பிரேரித்தார்.
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ (பேராசிரியர்) சரித்த ஹேரத் அவர்களுக்கு “இலங்கை தொழில்சார் வங்கியாளர் சங்க (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
குத்தகைக்கு கொடுக்கப்பட்ட வளவுகளின் உடைமையை மீளப்பெறுதல் சட்டமூலம் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படும்)
சபையினால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“விவசாயத் துறையுடன் தொடர்புடைய நிறுவனங்களை ஒருங்கிணைப்பதற்கான பொறிமுறையை உருவாக்குதல்” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ ஜகத் சமரவிக்ரம அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1650 மணியளவில் பாராளுமன்றமானது 2023 ஜனவரி 17ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






