2022 டிசம்பர் 13ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2022-12-13 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2021 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் XXIII ஆம் பகுதியையும், நான்காவது தொகுதியின் XVI ஆம் பகுதியையும் மற்றும் ஆறாவது தொகுதியின் VI, VII, VIII, IX, X, XI,XII, XIII, XIV, XV, XVI மற்றும் XVII ஆம் பகுதி
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய மனிதவள அபிவிருத்திச் சபையின் ஆண்டறிக்கை
(ii) 2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
(iii) 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான பதிவாளர் நாயகத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கைகள் மற்றும் கணக்குகள்
(iv) 2019 ஆம் ஆண்டுக்கான தேசிய வியாபார முகாமை நிறுவனத்தின் ஆண்டறிக்கை.
(v) 2020 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(vi) 2021 ஆம் ஆண்டுக்கான கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(vii) 2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் 7(3), 8, 10, 11 மற்றும் 12 பிரிவுகள் மற்றும் இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியசரின் அரசியலமைப்பின் 44(2) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 27 ஆம் பிரிவின் கீழ் நலன்புரி அனுகூலங்கள் கொடுப்பனவுகள் தொடர்பில் சனாதிபதியால் ஆக்கப்பட்டு, 2022 ஒக்டோபர் 20 ஆம் திகதிய 2302/23 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(viii) 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் பிரிவுகள் 27(1) மற்றும் (5), 28(2) மற்றும் (3), 64(2) மற்றும் 70 பிரிவுகளுடன் வாசிக்கப்பட வேண்டிய 71 ஆம் பிரிவின் கீழ் கொழும்புத் துறைமுக நகரத்தின் அதிகாரப் பிரதேசத்தின் மற்றும் அதன் இடப்பரப்பில் வியாபாரத்தை மேற்கொள்வதற்கு அங்கீகரிக்கப்பட்ட ஓர் ஆளாகாத் தகைமை பெறுவது தொடர்பில் கொழும்பு நகரப் பொருளாதார ஆணைக்குழுவிடம் வினவி, நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2022 செப்டெம்பர் 28 ஆம் திகதிய 2299/46 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(ix) 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் பிரிவு 27(1), 41(3)ஊ மற்றும் 41(9) உடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 71(1) ஆம் பிரிவின் கீழ் கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவிடம் வினவி, நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2022 செப்டெம்பர் 28 ஆம் திகதிய 2299/47 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(x) (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் 158 ஆம் பிரிவின் (2) ஆம் மற்றும் (3) ஆம் உப பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 237 ஆம் பிரிவின் கீழ் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2022 யூலை 07 ஆம் திகதிய 2287/28 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ நஸீர் அஹமட் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாச
ஸ்ரீலங்கா டெலிகொம் லிமிடெட்டினை மறுசீரமைத்தல்
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 ஆம் விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையினால் நிறைவேற்றப்பட்டன.:-
(i) பாராளுமன்ற உறுப்பினர்களினதும் பாராளுமன்றத்தினதும் சிறப்புரிமைகள் மீறப்படுதல் தொடர்பில் விசாரிப்பதற்கும் அது தொடர்பில் பொருத்தமான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு
(ii) இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்குப் பொருத்தமான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு
அதனையடுத்து, 1457 மணியளவில் பாராளுமன்றமானது 2023 ஜனவரி 05ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






