2022 டிசம்பர் 08ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2022-12-08 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : வங்கித்தொழில் மற்றும் நிதிச் சேவைகள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
B : பொருளாதார உறுதிப்படுத்தல் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
C : வழிவகைகள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
D : இணைந்த வருடாந்த பொதுக் கூட்டம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2018 ஆம் ஆண்டுக்கான ஹோமியோபதி மருத்துவ சபையின் ஆண்டறிக்கை
(ii) 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளுக்கான பனை அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கைகள்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
அரசாங்க நிதி பற்றிய குழுவின் இரண்டு அறிக்கைகள் அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ விதுற விக்கிரமநாயக்க
(ii) கௌரவ ரன்ஜித் சியம்பலாபிடிய
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாச
நாட்டில் நிலவும் வறுமை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான பிரச்சனைகள்
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
ஸ்ரீலங்கா டெலிகொம், இலங்கை மின்சார சபை மற்றும் ஏனைய நிறுவனங்களை விற்பனை செய்தல் தொடர்பாக 2022.12.02 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ (வண.) அதுரலியே ரதன தேரர் அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சர் சார்பாக நிதி இராஜாங்க அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள் பதிலளித்தார்.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
(262 ஆம் அத்தியாயமான) உள்ளூர் அதிகாரசபைத் தோ்தல்கள் கட்டளைச்சட்டம்; 1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, மாகாணசபைத் தோ்தல்கள் சட்டம்; 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்றத் தோ்தல்கள் சட்டம்; மற்றும் 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க, சனாதிபதித் தோ்தல்கள் சட்டம் என்பவற்றின் கீழ் நடாத்தப்படும் ஒவ்வொரு தோ்தலிலும் வேட்பாளர்களினால் உறப்பட்ட செலவினத்தை ஒழுங்குபடுத்துவதற்கும்; அத்துடன் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடைநோ்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்காக
“தோ்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்துதல்”
எனும் சட்டமூலத்தினை கௌரவ நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(i) ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2023) - குழு
ஒதுக்கீட்டுச் (2023) சட்டமூலம் - ஒதுக்கப்பட்ட இருபதாம் நாள் - குழு நிலை விவாதம்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2023) (வரவு செலவுத் திட்டம்), 43 பெரும்பான்மை வாக்குகளால் (ஆதரவாக 123; எதிராக 80) சபையினால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 முதல் 26 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(ii) அத்தியாவசிய பொதுமக்கள் சேவை சட்டத்தின் கீழ் தீர்மானம்
(iii) பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் கீழ் இரண்டு கட்டளைகள்
(iv) நிதிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி
(v) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஆறு ஒழுங்குவிதிகள்
(vi) விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் ஐந்து கட்டளைகள்
(vii) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் மூன்று தீர்மானங்கள்
(viii) துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் இரண்டு கட்டளைகள்
(ix) அந்நியச் செலாவணிச் சட்டத்தின் கீழ் தீர்மானம்
(x) சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழ் கட்டளை
(xi) சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(xii) இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் இரண்டு கட்டளைகள்
அதனையடுத்து, 1914 மணியளவில் பாராளுமன்றமானது 2022 டிசம்பர் 09ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2023]
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






