இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2022 டிசம்பர் 05ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2022-12-05

கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : "Committee rejects move to increase retirement age of Parliament Secretary General" என தலைப்பிடப்பட்ட செய்தித்தாள் அறிக்கை      
B : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை
(ii)    2020 ஆம் ஆண்டுக்கான விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) லிமிடெட்டின் வருடாந்த அறிக்கை
(iii)    2018 ஆம் ஆண்டுக்கான இலங்கை நீதிபதிகள் நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை
(iv)    2020 ஆம் ஆண்டுக்கான ஊக்கு பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான இலங்கை முகவராண்மையின் வருடாந்த அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் நான்கு அறிக்கைகள் அக்குழுவின் தவிசாளர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களுக்கு பதிலாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ ஜானக வக்கும்புர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சனாதிபதி சட்டத்தரணி (கலாநிதி) விஜயதாஸ ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii)    ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடருக்கான அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது அறிக்கைகள் அக்குழுவின் தவிசாளர் கௌரவ கபீர் ஹஷீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

கௌரவ சனத் நிசாந்த
(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது)


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(i)    ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2023) - குழு

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் - ஒதுக்கப்பட்ட பதினெட்டாம் நாள் - குழு நிலை விவாதம்

(ii) மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)

சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1911 மணியளவில் பாராளுமன்றமானது 2022 டிசம்பர் 06ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2023]

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom