இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2022 டிசம்பர் 02ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2022-12-02

கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தை தாபிப்பதற்கான கூட்டம்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

(i)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -
•    2019 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XXVI ஆம் பகுதியையும்;
•    2020 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XXI ஆம் பகுதியையும் ; மற்றும்
•    2021 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் XX, XXI மற்றும் XXII ஆம் பகுதிகளையும், நான்காவது தொகுதியின் XIV மற்றும் XV ஆம் பகுதிகளையும் மற்றும் ஆறாம் தொகுதியின்  தொகுதியின் III, IV மற்றும் V ஆம் பகுதிகள்

(ii) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -
•    கொழும்பு நகரம் மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களுக்கான நுழைவுப் பாதைகளில் வாகனநெரிசலைக் குறைப்பதற்காக உரிய அரச நிறுவனங்களினால்  மேற்கொள்ளப்பட்டுள்ள செயலாற்றலை மதிப்பிடல் தொடர்பிலான செயலாற்றுகை அறிக்கையின் எட்டாவது தொகுதியின் – XI ஆம் பகுதி; மற்றும்
•    நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இலகு ரயில் போக்குவரத்து செயற்திட்டம் (கொழும்பு தொடக்கம் மாலம்பே வரை) இலங்கை அரசாங்கத்தினால் ஒருதலைப்பட்சமாக முடிவுறுத்தப்பட்டமை தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கையின் பத்தாவது தொகுதியின் - VI ஆம் பகுதி


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2021 ஆம் ஆண்டுக்கான நிருவாக மேன்முறையீடுகள் நியாய சபையின் செயலாற்றுகை அறிக்கை
(ii)    2020 ஆம் ஆண்டுக்கான நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை
(iii)    2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஆண்டறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    சுற்றுலாத்துறை மற்றும் காணி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ ஹரின் பர்னாந்து அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ (வண.) அதுரலியே ரதன தேரர்

ஸ்ரீலங்கா டெலிகொம், இலங்கை மின்சார சபை மற்றும் ஏனைய நிறுவனங்களை விற்பனை செய்தல்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2023) - குழு

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் - ஒதுக்கப்பட்ட பதினாறாம் நாள் - குழு நிலை விவாதம்


அதனையடுத்து, 1900 மணியளவில் பாராளுமன்றமானது 2022 டிசம்பர் 03ஆந் திகதி சனிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2023]

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom