2022 நவம்பர் 29ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2022-11-29 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii) சுகாதார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ கெஹெலிய ரம்புக்வெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iv) நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக கௌரவ ரன்ஜித் சியம்பலாபிடிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ விதுர விக்ரமநாயக
(ii) கௌரவ சட்டத்தரணி மதுர விதானகே
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாச
நிர்மாணத்துறை தொழிற்துறையிலுள்ள பிரச்சினைகள்
மேற்சொன்ன வினாவிற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்கள் பதிலளித்தார்.
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
(i) சுகாதாரத் துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக 2022.11.17 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு சுகாதார அமைச்சர் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ கெஹெலிய ரம்புக்வெல்ல அவர்கள் பதிலளித்தார்.
(ii) இலங்கை சுங்கத்தில் தேக்கி வைக்கப்பட்டுள்ள பால் மா கொள்கலன்கள் தொடர்பாக கூற்றொன்றினை நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் சார்பாக நிதி இராஜாங்க அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள் முன்வைத்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(i) ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2023) - குழு
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் - ஒதுக்கப்பட்ட பதின்மூன்றாம் நாள் - குழு நிலை விவாதம்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 முதல் 27 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வருவன சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(ii) அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை (2017)
(iii) அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை (2017)
(iv) விஜயகுமாரதுங்க ஞாபகார்த்த மருத்துவமனையின் வருடாந்த அறிக்கை (2017)
(v) ஜயவர்தனபுர பொது மருத்துவமனையின் வருடாந்த அறிக்கை (2017)
(vi) விஜயகுமாரதுங்க ஞாபகார்த்த மருத்துவமனையின் வருடாந்த அறிக்கை (2018)
(vii) இலங்கை ஆயுர்வேத மருந்துப் பொருட்கள் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை (2017)
(viii) இலங்கை ஆயுர்வேத மருந்துப் பொருட்கள் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை (2018)
(ix) ஸ்ரீ ஜயவர்தனபுர பொது மருத்துவமனையின் வருடாந்த அறிக்கை (2018)
(x) ஆயுர்வேத மருத்துவ மன்றத்தின் வருடாந்த அறிக்கை (2018)
(xi) ஆயுர்வேத மருத்துவ மன்றத்தின் வருடாந்த அறிக்கை (2019)
(xii) புகையிலை மற்றும் போதைப்பொருள் பற்றிய தேசிய அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை (2018)
(xiii) ஹோமியோபதி மருத்துவ மன்றத்தின் வருடாந்த அறிக்கை (2015)
(xiv) ஹோமியோபதி மருத்துவ மன்றத்தின் வருடாந்த அறிக்கை (2016)
(xv) அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை (2019)
(xvi) ஸ்ரீ ஜயவர்தனபுர பொது மருத்துவமனையின் வருடாந்த அறிக்கை (2016)
(xvii) புகையிலை மற்றும் போதைப் பொருள் பற்றிய தேசிய அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை (2016)
(xviii) புகையிலை மற்றும் போதைப் பொருள் பற்றிய தேசிய அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை (2017)
(xix) அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை (2016)
(xx) ஆயுர்வேத மருத்துவ மன்றத்தின் வருடாந்த அறிக்கை (2017)
(xxi) இலங்கை ஆயுர்வேத மருந்துப் பொருட்கள் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை (2015)
(xxii) விஜயகுமாரதுங்க ஞாபகார்த்த மருத்துவமனையின் வருடாந்த அறிக்கை (2016)
(xxiii) முதியோர்களுக்கான தேசிய சபையின் வருடாந்த அறிக்கை (2017)
(xxiv) ஜயவர்தனபுர பொது மருத்துவமனை மற்றும் மருத்துவப் பட்டப்பின் படிப்பு நிலையத்தின் வருடாந்த அறிக்கை (2019)
(xxv) முதியோர்களுக்கான தேசிய சபையின் வருடாந்த அறிக்கை (2018)
(xxvi) முதியோர்களுக்கான தேசிய சபையின் வருடாந்த அறிக்கை (2019)
(xxvii) ஆயுர்வேத மருத்துவ மன்றத்தின் வருடாந்த அறிக்கை (2020)
அதனையடுத்து, 1946 மணியளவில் பாராளுமன்றமானது 2022 நவம்பர் 30ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2023]
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






