2022 நவம்பர் 26ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2022-11-26 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : அரசாங்க நிதி பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2020 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(ii) 2021 ஆம் ஆண்டுக்கான ஆயுர்வேத வைத்திய சபையின் வருடாந்த அறிக்கை
(iii) 2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேயிலை சபையின் வருடாந்த அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) நீர்ப்பாசன அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ ரொசான் ரணசிங்க அவர்களுக்கு பதிலாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ ஜகத் சமரவிக்ரம அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ ரொசான் ரணசிங்க அவர்களுக்கு பதிலாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ றோஹண திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ விஜித ஹேரத்
(ii) கௌரவ அஜித் மான்னப்பெரும - இரண்டு மனுக்கள்
(iii) கௌரவ சுதத் மஞ்சுல - இரண்டு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணைகளை சபை ஏற்றுக் கொண்டது-
(i) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119 இன் ஏற்பாடுகள் மற்றும் 2022 ஒக்டோபர் 18 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பனவற்றால் தடைபெறாமல் 2022 நவம்பர் 25 ஆம் திகதி தெரிவுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டவாறு ஒன்பதாவது பாராளுமன்றத்தில் மூன்றாவது கூட்டத்தொடரில் சேவையாற்றுவதற்காக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவானது தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் முப்பத்தொரு (31) பாராளுமன்ற உறுப்பினர்கைளக் கொண்டிருக்குமாக
(ii) அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 120 இன் ஏற்பாடுகள் மற்றும் 2022 ஒக்டோபர் 18 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பனவற்றால் தடைபெறாமல் 2022 நவம்பர் 25 ஆம் திகதி தெரிவுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டவாறு ஒன்பதாவது பாராளுமன்றத்தில் மூன்றாவது கூட்டத்தொடரில் சேவையாற்றுவதற்காக அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவானது, தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் முப்பத்தொரு (31) பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக
(iii) வங்கித்தொழில் மற்றும் நிதிச் சேவைகள் பற்றிய குழு
2022 நவம்பர் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையினால் திருத்தப்பட்ட பாராளுமன்ற நிலையியற் கட்டளை 122 இன் பிரகாரம் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் மூன்றாவது கூட்டத்தொடரில் சேவையாற்றுவதற்காக வங்கித்தொழில் மற்றும் நிதிச் சேவைகள் பற்றிய குழுவானது தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் பதினாறு (16) பாராளுமன்ற உறுப்பினர்கைளக் கொண்டிருக்குமாக
(iv) பொருளாதார உறுதிப்படுத்தல் பற்றிய குழு
நவம்பர் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையினால் திருத்தப்பட்ட பாராளுமன்ற நிலையியற் கட்டளை 123 இன் பிரகாரம் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் மூன்றாவது கூட்டத்தொடரில் சேவையாற்றுவதற்காக பொருளாதார உறுதிப்படுத்தல் பற்றிய குழுவானது தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் பதினாறு (16) பாராளுமன்ற உறுப்பினர்கைளக் கொண்டிருக்குமாக
(v) வழிவகைகள் பற்றிய குழு
2022 நவம்பர் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையினால் திருத்தப்பட்ட பாராளுமன்ற நிலையியற் கட்டளை 124 இன் பிரகாரம் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் மூன்றாவது கூட்டத்தொடரில் சேவையாற்றுவதற்காக வழிவகைகள் பற்றிய குழுவானது தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் பதினாறு (16) பாராளுமன்ற உறுப்பினர்கைளக் கொண்டிருக்குமாக
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2023) - குழு
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் - ஒதுக்கப்பட்ட பதினொராம் நாள் - குழு நிலை விவாதம்
அதனையடுத்து, 1908 மணியளவில் பாராளுமன்றமானது 2022 நவம்பர் 28ஆந் திகதி திங்கட்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2023]
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






