இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2022 நவம்பர் 25ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2022-11-25

கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம் மற்றும் தெரிவுக் குழுவின் கூட்டங்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2018 ஆம் ஆண்டுக்கான தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் ஆண்டறிக்கை
(ii)    2018, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கான வாழ்க்கைத்தொழில்சார் தொழில்நுட்பவயில் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கைகள்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

நீர் வழங்கல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ கெஹெலிய ரம்புக்வெல்ல அவர்களுக்கு பதிலாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ சனத் நிசாந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i)    கௌரவ வஜிர அபேவர்தன                    
(ii)    கௌரவ (டாக்டர்) கயாஷான் நவனந்த                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாச

கைப்பணிப் பொருட்கள் தொழிற்துறையிலுள்ள பிரச்சினைகள்

மேற்சொன்ன வினாவிற்கு கல்வி அமைச்சர் கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணவீர ஆகியோர் பதிலளித்தனர்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(i)    ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2023) - குழு

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் - ஒதுக்கப்பட்ட பத்தாம் நாள் - குழு நிலை விவாதம்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 முதல் 11 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வருவன சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(ii)    இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் சபையின் வருடாந்த அறிக்கை (2019)
(iii)    இலங்கை அணுசக்தி சபையின் வருடாந்த அறிக்கை (2017)
(iv)    வரையறுக்கப்பட்ட இலங்கை மின்சார (தனியார்) கம்பனியின் வருடாந்த அறிக்கை (2017)
(v)    இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை (2017)
(vi)    இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை (2018)
(vii)    இலங்கை மின்சார சபையின் வருடாந்த அறிக்கை (2019)
(viii)    வரையறுக்கப்பட்ட இலங்கை மின்சார (தனியார்) கம்பனியின் வருடாந்த அறிக்கை (2018)
(ix)    வரையறுக்கப்பட்ட இலங்கை மின்சார (தனியார்) கம்பனியின் வருடாந்த அறிக்கை (2019)
(x)    இலங்கை அணுசக்தி சபையின் வருடாந்த அறிக்கை (2018)
(xi)    வரையறுக்கப்பட்ட இலங்கை நிலக்கரி (தனியார்) கம்பனியின் வருடாந்த அறிக்கை (2018)


அதனையடுத்து, 1853 மணியளவில் பாராளுமன்றமானது 2022 நவம்பர் 26ஆந் திகதி சனிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2023]

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom