இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2022 நவம்பர் 23ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2022-11-23

கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சனாதிபதியின் செய்திகள்

A : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்)


சபாநாயகரின் அறிவித்தல்கள்

B : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்
C : குழுநிலை விவாதத்தின் போதான ஆசன ஒதுக்கம்
D : 2022 நவம்பர் 26 மற்றும் 29 ஆம் திகதிகளுக்கான திருத்தப்பட்ட குழுநிலை நிகழ்ச்சிநிரல்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2014, 2015, 2017 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கான அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஆண்டறிக்கைகள்
(ii)    2016, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கைகள்
(iii)    2020 ஆம் ஆண்டுக்கான சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபையின் வருடாந்த அறிக்கை

(iv) 2023 ஆம் ஆண்டுக்கான நிதி ஆணைக்குழுவினால் கௌரவ சனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகள்
(v)    நிரல்களின் திருத்தங்களுக்கான உத்தேச திருத்தங்களின் பட்டியல் வரைவு மதிப்பீடு – 2023


மனுக்களைச் சமர்ப்பித்தல்

கௌரவ சமன்பிரிய ஹேரத்                    
(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாச

இரத்தினக்கல் தொழிற்துறையிலுள்ள பிரச்சினைகள்

மேற்சொன்ன வினாவிற்கு ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கௌரவ சாமர சம்பத் தசனாயக அவர்கள் பதிலளித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(i)    ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2023) - குழு

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் - ஒதுக்கப்பட்ட எட்டாம் நாள் - குழு நிலை விவாதம்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 மற்றும் 3 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வருவன சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(ii)    பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கான இரு திருத்தங்கள்


அதனையடுத்து, 1842 மணியளவில் பாராளுமன்றமானது 2022 நவம்பர் 24ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2023]

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom