இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2022 நவம்பர் 15ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2022-11-15

கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2020 ஆம் ஆண்டுக்கான ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் ஆண்டறிக்கை
(ii)    2020 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி லொத்தர் சபையின் ஆண்டறிக்கை
(iii)    2021 ஆம் ஆண்டுக்கான தேசிய சேமிப்பு வங்கியின் ஒருங்கிணைக்கப்பட்ட ஆண்டறிக்கை
(iv)    2020 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
(v)    2020 ஆம் ஆண்டுக்கான கொழும்பு பல்கலைக்கழகத்தின் சுதேச மருத்துவ பட்டப்பின் நிறுவகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்
(vi)    2020 ஆம் ஆண்டுக்கான களனிப் பல்கலைக்கழகத்தின் தொல்பொருளியல் பட்டப்பின்படிப்பு நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
(vii)    2021 ஆம் ஆண்டுக்கான தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(viii)    2017 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை போக்குவரத்துச் சபையின் ஆண்டறிக்கை
(ix)    2021 ஆம் ஆண்டுக்கான சேதனப் பசளை உற்பத்தி மேம்பாடு மற்றும் விநியோக ஒழுங்குறுத்துகை மற்றும் நெல், தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு, விதை உற்பத்திகள் மற்றும் உயர் தொழில்நுட்ப கமத்தொழில் இராஜாங்க அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(x)    2021 ஆம் ஆண்டுக்கான காணி முகாமைத்துவ அலுவல்கள் மற்றும் அரச தொழில்முயற்சிக் காணிகள் மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(xi)    2021 ஆம் ஆண்டுக்கான காணி உரித்து நிர்ணயத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xii)    2021 ஆம் ஆண்டுக்கான காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xiii)    2020 ஆம் ஆண்டுக்கான துருசவிய நிதியத்தின் ஆண்டறிக்கை
(xiv)    2020 ஆம் ஆண்டுக்கான கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை

(xv) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 5 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2022 ஆகஸ்ட் 09 ஆம் திகதிய 2292/29 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xvi)    2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் மற்றும் 5 ஆம் பிரிவுகளின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2022 ஆகஸ்ட் 10 ஆம் திகதிய 2292/41 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xvii)    2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் மற்றும் 5 ஆம் பிரிவுகளின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2022 செப்டெம்பர் 03 ஆம் திகதிய 2295/44 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xviii)    2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் மற்றும் 5 ஆம் பிரிவுகளின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2022 செப்டெம்பர் 22 ஆம் திகதிய 2298/51 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xix)    2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் மற்றும் 5 ஆம் பிரிவுகளின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2022 ஒக்டோபர் 13 ஆம் திகதிய 2301/40 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xx)    1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14(2) ஆம் பிரிவின் கீழ் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2022 ஆகஸ்ட் 09 ஆம் திகதிய 2292/32 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xxi)    (அத்தியாயம் 235)  சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10(அ) ஆம் பிரிவின் கீழ் இறக்குமதித் தீர்வை வரி தொடர்பான தீர்மானம்
(2022 ஆகஸ்ட் 09 ஆம் திகதிய 2292/31 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை)
(xxii)    (அத்தியாயம் 235)  சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10(அ) ஆம் பிரிவின் கீழ் இறக்குமதித் தீர்வை வரி தொடர்பான தீர்மானம்
(2022 ஆகஸ்ட் 06 ஆம் திகதிய 2300/27 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை)


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித் திட்டங்களை அடையாளம் காணல் பற்றிய உபகுழுவினால் தேசிய பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட, அதன் முதலாவது அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாட்டளி சம்பிக்க ரணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ அநுராத ஜயரத்ன                    
(ii)    கௌரவ சாமர சம்பத் தசனாயக                    
(iii)    கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க                    
(iv)    கௌரவ வருண லியனகே                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

2021 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தைத் திருத்துவதற்காக

“ஒதுக்கீடு (திருத்தம்)”

எனும் சட்டமூலத்தினை கௌரவ பாராளுமன்ற சபை முதல்வர் அவர்கள் பிரேரித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2023) - இரண்டாம்  மதிப்பீடு (ஒத்திவைப்பு விவாதம்) (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2023) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்காக ஒதுக்கப்பட்ட முதலாம் நாள் இன்றாகும்.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“தோட்டத் தொழிலாளர்களுக்கான உரிமைப் பத்திரங்கள்” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ குமாரசிறி ரத்னாயக்க அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


இதனையடுத்து, 1755 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2023) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2022 நவம்பர் 16ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2023]

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom