2022 நவம்பர் 09ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2022-11-09 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2019 ஆம் ஆண்டுக்கான தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் ஆண்டறிக்கை
(ii) 2021 ஆம் ஆண்டுக்கான சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(iii) 2020 ஆம் ஆண்டுக்கான அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(iv) 2021 ஆம் ஆண்டுக்கான தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(v) 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கான சிரம வாசனா நிதியத்தின் ஆண்டறிக்கைகள்
(vi) 2020 ஆம் ஆண்டுக்கான ஊழியர் சேமலாப நிதியத்தின் ஆண்டறிக்கை
(vii) 2020 ஆம் ஆண்டுக்கான மஹபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியத்தின் ஆண்டறிக்கை
(viii) 2021 ஆம் ஆண்டுக்கான பொல்கொல்ல தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(ix) 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4(1) மற்றும் 14 ஆம் பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ், நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2022 மே 06 ஆம் திகதிய 2278/21 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(x) 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4(1) மற்றும் 14 ஆம் பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ், நிதி, பெருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2022 யூன் 24 ஆம் திகதிய 2285/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xi) 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க, அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, 2022 நவம்பர் 03 ஆம் திகதிய 2304/51 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் மற்றும் அதன் அட்டவணையில் பிரசுரிக்கப்பட்ட பிரகடனம்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ நலின் பிரனாந்து அவர்களுக்கு பதிலாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ கே. காதர் மஸ்தான் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ விஜித ஹேரத்
(ii) கௌரவ அஸோக அபேசிங்ஹ
(iii) கௌரவ புத்திக பத்திறண - இரண்டு மனுக்கள்
(iv) கௌரவ இம்ரான் மஹ்ரூப்
(v) கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ (வண.) அதுரலியே ரதன தேரர்
பாடசாலைகளில் தேசிய பிரச்சினையாகவுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தல்
மேற்சொன்ன வினாவிற்கு கல்வி அமைச்சர் கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த அவர்கள் பதிலளித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 7 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வருவன சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் கீழ் கட்டளை
(ii) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழான இரண்டு அறிவித்தல்கள்
(iii) நிதிச் சட்டத்தின் கீழ் கட்டளை
(iv) அந்நியச் செலவாணி சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(v) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்குவிதிகள்
ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்
கௌரவ வடிவேல் சுரேஷ் அவர்களினால் வினாவொன்று கேட்கப்பட்டது.
அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2022 நவம்பர் 10ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






