2022 நவம்பர் 08ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2022-11-08 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சனாதிபதியின் செய்திகள்
A : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்)
சபாநாயகரின் அறிவித்தல்கள்
B : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்
C : உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்
D : ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்
E : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம் மற்றும் தெரிவுக் குழுவின் கூட்டங்கள்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2021 ஆம் ஆண்டுக்கான வெகுசன ஊடக அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ii) 2016 ஆம் ஆண்டுக்கான தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் ஆண்டறிக்கை
(iii) 2019 ஆம் ஆண்டுக்கான தேசிய அறுவடைக்கு பிந்திய முகாமைத்துவ நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(iv) 2021 ஆம் ஆண்டுக்கான வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(v) 2021 ஆம் ஆண்டுக்கான அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(vi) 2019/2020 ஆம் ஆண்டுக்கான பீசீசீ லங்கா லிமிடெட்டின் ஆண்டறிக்கை
(vii) 2019 ஆம் ஆண்டுக்கான சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபையின் வருடாந்த அறிக்கை
(viii) 2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(ix) 2021 ஆம் ஆண்டுக்கான குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(x)2005 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க திருத்தப்பட்டவாறான சட்டத்தின் 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் 2அ ஆம் பிரிவின் கீழ், பெறுமதி சேர் தொடர்பாக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு 2022 ஆகஸ்ட் 31 ஆம் திகதிய 2295/08 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xi) 2010 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க, சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு 2022 ஆகஸ்ட் 31 ஆம் திகதிய 2295/09 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xii) 2010 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க, சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் 3 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 4 ஆம் பிரிவின் கீழ் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு 2022 ஆகஸ்ட் 31 ஆம் திகதிய 2295/10 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xiii) 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4(1) மற்றும் 14 ஆம் பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ், நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2022 ஒக்டோபர் 05 ஆம் திகதிய 2300/12 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xiv) 2012 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க நிதிச் சட்டத்துடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2013 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 12 ஆம் பிரிவின் கீழ் வர்த்தக மையங்கள் ஒழுங்குவிதிகள் தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2022 ஆகஸ்ட் 10 ஆம் திகதிய 2292/36 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி
(xv) 1974 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க சுங்க (திருத்தச்) சட்டத்தினாலும் மற்றும் 1988 ஆம் ஆண்டின் 83 ஆம் இலக்க சுங்க (திருத்தச்) சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான (235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 19(அ) ஆம் பிரிவின் கீழ் இறக்குமதிப் பொருட்கள் மீதான சுங்கத் தீர்வை தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2022 செப்டெம்பர் 20 ஆம் திகதிய 2298/15 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ மஹிந்த அமரவீர
(ii) கௌரவ விஜித பேருகொட - இரண்டு மனுக்கள்
(iii) கௌரவ சட்டத்தரணி லக்ஷ்மன் கிரிஎல்ல
(iv) கௌரவ வாசுதேவ நாணாயக்கார
(v) கௌரவ முஜிபுர் ரஹுமான்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாச
இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள்
மேற்சொன்ன வினாவிற்கு மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கௌரவ (திருமதி) கீதா சமன்மலீ குமாரசிங்ஹ மற்றும் கல்வி அமைச்சர் கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த ஆகியோர் பதிலளித்தனர்.
சமுகமளிக்காதிருப்பதற்கு அனுமதிகோரும் பிரேரணைகள்
திருகோணமலை தேர்தல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ராஜவரோதயம் சம்பந்தன் அவர்கள் 2022.11.08 முதல் பாராளுமன்ற அமர்வுகளுக்கு சமுகமளிக்காதிருப்பதற்கு கௌரவ எதிர்க்கட்சி முதற்கோலாசான் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பிரேரணைக்கு பாராளுமன்ற அனுமதி வழங்கப்பட்டது.
துறைசார் மேற்பார்வைக் குழுக்கள்
பின்வருமாறு பதினேழு (17) துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் பெயர் குறிப்பிட்டு நியமிக்கப்படுமாக,
1. மத விவகாரங்கள் மற்றும் சகவாழ்வு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
2. நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
3. தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
4. தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
5. சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
6. பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
7. பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
8. வலுச்சக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
9. உணவுப் பாதுகாப்பு மற்றும் கமத்தொழில் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
10. சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
11. கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
12. வெளிநாட்டுத் தொழில்கள் மற்றும் உழைப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
13. நியாயமான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
14. சுகாதாரம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
15. சிறுவர்கள், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
16. ஊடகம், இளைஞர், மரபுரிமை மற்றும் புதிய பிரஜைகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
17. வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 111 இன் பிரகாரம், துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, ஒவ்வோர் துறைசார் மேற்பார்வைக் குழுவும் தெரிவுக்குழுவினால் நியமிக்கப்படும் எட்டு (8) பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக.
ஒவ்வொரு துறைசார் மேற்பார்வைக் குழுவினதும் கூட்ட நடப்பெண் மூன்று (3) உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும்.
சிறப்புரிமைகள்
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்களால் தனதும் கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் அவர்களினதும் சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாக 2022 ஒக்தோபர் 06 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம் கௌரவ எதிர்க்கட்சி முதற்கோலாசான் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 118 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ சட்டத்தரணி பிரேம்நாத் சி. தொலவத்த அவர்களுக்கு “உள்ளூர் அதிகாரசபைகள் தோ்தல்கள் (திருத்தச்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஒத்திவைப்புப் பிரேரணை
“நாட்டில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள்” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ அநுர திசாநாயக்க அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1700 மணியளவில் பாராளுமன்றமானது 2022 நவம்பர் 09ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






