இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2022 ஒக்டோபர் 18ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2022-10-18

பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமான கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்    
B : அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்
C : அரசாங்க நிதி பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
D : சபைக் குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்    
E : மீதமுள்ள 19 அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2021 ஆம் ஆண்டுக்கான கல்வி அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ii)    2021 ஆம் ஆண்டுக்கான தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iii)    2021 ஆம் ஆண்டுக்கான ஜய கண்டேனர் டர்மினல்ஸ் லிமிடெட்டின் ஆண்டறிக்கை
(iv)    2020 ஆம் ஆண்டுக்கான சிலோன் பெற்றோலியம் ஸ்டோரேஜ் டேமினல்ஸ் லிமிடெட்டின் வருடாந்த அறிக்கை
(v)    2021 ஆம் ஆண்டுக்கான தொழில் திணைக்களத்தின் வருடாந்த செயலாறுகை அறிக்கை
(vi)    2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை பொலிஸின் செயலாற்றுகை அறிக்கை

(vii) ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4(1) மற்றும் 14 ஆம் பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ்,  நிதி, பெருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2022 செப்டெம்பர் 16 ஆம் திகதிய 2297/79 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில்  பிரசுரிக்கப்பட்ட  ஒழுங்குவிதிகள்
(viii)    1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4(1) மற்றும் 14 ஆம் பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ்,  நிதி, பெருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2022 செப்டெம்பர் 23 ஆம் திகதிய 2298/55 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில்  பிரசுரிக்கப்பட்ட  ஒழுங்குவிதிகள்
(ix)    2021 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2022.09.01 முதல் 2022.09.30 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு
(x)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 21 ஆம் பிரிவு மற்றும் 139 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 27(1) ஆம் பிரிவின்  கீழ்  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது இலங்கை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொறிமுறை பொறியியல் துறையினை நிறுவுதல் தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2022 ஆகஸ்ட் 09 ஆம் திகதிய 2292/30 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க                    
(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாச

விவசாயிகளின் குறைகள்

மேற்சொன்ன வினாவிற்கு கமத்தொழில் இராஜாங்க அமைச்சர் கௌரவ மொஹான் பிரியதர்ஷன த சில்வா அவர்கள் பதிலளித்தார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்-
(i)    ஒதுக்கீடு - 2023 ஆம் நிதியாண்டின் சேவைக்கு ஏற்பாடு செய்வதற்கும்; அத்தகைய சேவையின் நோக்கத்திற்காக இலங்கையிலோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ கடன்களைத் திரட்டுவதற்கு அதிகாரமளிப்பதற்கும்; அந்நிதியாண்டின் போது அரசாங்கத்தின் குறித்த சில செயற்பாடுகள் தொடர்பில் நிதி ஏற்பாட்டைச் செய்வதற்கும்; அத்தகைய செயற்பாடுகளின் மீதான செலவினத்திற்கு அந்நிதியாண்டின் போது தேவைப்படும் பணங்களைத் திரட்டு நிதியத்திலிருந்து அல்லது அரசாங்கத்திற்குரிய அல்லது அதன் கையாளுகையிலுள்ள வேறேதேனும் நிதியத்திலிருந்து அல்லது பணங்களிலிருந்து முற்பணங்கள் என்றவகையாக கொடுப்பனவை இயலச் செய்வதற்கும்; திரட்டு நிதியத்திற்கு அத்தகைய பணங்களை மீளளிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும், அத்துடன் அவற்றுடன் தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்கானது
(ii)    சோ்பெறுமதி வரி (திருத்தம்) - 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, சோ்பெறுமதி வரிச் சட்டத்தைத் திருத்துவதற்கானது


கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணைகளை சபை ஏற்றுக் கொண்டது-

(i) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119 இன் ஏற்பாடுகள் மற்றும் 2022 ஆகஸ்ட் 29 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேணைகளினால் தடைபெறாமல் 2022 ஒக்டோபர் 07 ஆம் திகதி தெரிவுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டவாறு ஒன்பதாவது பாராளுமன்றத்தில் மூன்றாவது கூட்டத்தொடரில் சேவையாற்றுவதற்காக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவானது தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் இருபத்தொன்பது (29) பாராளுமன்ற உறுப்பினர்கைளக் கொண்டிருக்குமாக

(ii) அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழு

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 120  இன்  ஏற்பாடுகள் மற்றும்  2022 ஆகஸ்ட் 29 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேணையினால் தடைபெறாமல் 2022 ஒக்டோபர் 07 ஆம் திகதி தெரிவுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டவாறு ஒன்பதாவது பாராளுமன்றத்தில் மூன்றாவது கூட்டத்தொடரில் சேவையாற்றுவதற்காக அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவானது தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் இருபத்தொன்பது (29) பாராளுமன்ற உறுப்பினர்கைளக் கொண்டிருக்குமாக

(iii) அரசாங்க நிதி பற்றிய குழு

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 121  இன்  ஏற்பாடுகள் மற்றும் 2022 ஆகஸ்ட் 29 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேணையினால் தடைபெறாமல் 2022 ஒக்டோபர் 07 ஆம் திகதி தெரிவுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டவாறு ஒன்பதாவது பாராளுமன்றத்தில் மூன்றாவது கூட்டத்தொடரில் சேவையாற்றுவதற்காக அரசாங்க நிதி பற்றிய குழுவானது தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் இருபத்தெட்டு (28) பாராளுமன்ற உறுப்பினர்கைளக் கொண்டிருக்குமாக


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம்  (இன்றைய ஒழுங்குப்பத்திரத்தில் 1ஆம் விடயமாகக் காணப்படும்)

இரண்டாம் மதிப்பீடு மீது வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு (ஆதரவாக 77; எதிராக 17) திருத்தங்களுடன் சபையால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக வெளிச்செல்லும் அரச ஊழியர்களுக்கான தொழில்சார் பயிற்சிகள்” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ யூ.கே. சுமித் உடுகும்புர அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1752 மணியளவில் பாராளுமன்றமானது 2022 ஒக்டோபர் 19ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom