2022 ஒக்டோபர் 07ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2022-10-07 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : “நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தச்)” சட்டமூலம் சம்பந்தமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
B : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம் மற்றும் தெரிவுக் குழுவின் கூட்டங்கள்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2021 ஆம் ஆண்டுக்கான சுகாதார அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(ii) 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை நில அளவைத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(iii) 2021 ஆம் ஆண்டுக்கான காணி உபயோகக் கொள்கைத் திட்டமிடல் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(iv) 2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை அணுசக்தி சபையின் வருடாந்த அறிக்கை
(v) 2020 ஆம் ஆண்டுக்கான அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கைகளும் ஆண்டுக் கணக்குகளும்
(vi) 2019 ஆம் ஆண்டுக்கான தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வருடாந்த அறிக்கை
(vii) (54 ஆம் அத்தியாயமான) சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் 94 ஆம் பிரிவின் கீழ் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2022 யூலை 12 ஆம் திகதிய 2288/15 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட விதிகள்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
மின்சக்தி மற்றும் வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ கஞ்சன விஜேசேகர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ உதய கம்மன்பில
(ii) கௌரவ புத்திக பத்திறண
(iii) கௌரவ கே. சுஜித் சஞ்ஜய பெரேரா
(iv) கௌரவ உதயன கிரிந்திகொட
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
கடற்றொழில் துறையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக 2022.10.04 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பதிலளித்தார்.
ஒத்திவைப்புப் பிரேரணை
“நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து கௌரவ ஜனாதிபதி அவர்கள் 2022.10.06 அன்று முன்வைத்த கூற்று” தொடர்பான ஒத்திவைக்கப்பட்ட விவாதம் தொடரப்பட்டு முடிவுறுத்தப்பட்டது.
அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2022 ஒக்டோபர் 18ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






