2022 ஒக்டோபர் 04ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2022-10-04 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -
• 2016 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XXII ஆம் பகுதியையும் ;
• 2017 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XXVII ஆம் பகுதியையும் ;
• 2018 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXXVIII, XXXIX, XL, XLI மற்றும் XLII ஆம் பகுதிகளையும் ;
• 2019 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XXX மற்றும் XXXI ஆம் பகுதிகளையும் ;
• 2020 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXXII, XXXIII மற்றும் XXXIV ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் XVII ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XXII மற்றும் XXIII ஆம் பகுதிகளையும்; மற்றும்
• 2021 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் I, II, III, IV மற்றும் V ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் I மற்றும் II ஆம் பகுதிகளையும் மற்றும் ஒன்பதாவது பகுதியின் II ஆம் பகுதி
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை கடலோர காவல் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ii) 2021 ஆம் ஆண்டுக்கான எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை
(iii) 2021 ஆம் ஆண்டுக்கான சனாதிபதி செயலகத்தின் செயலாற்றுகை அறிக்கை
(iv) 2020 ஆம் ஆண்டுக்கான கொழும்பு பல்கலைக்கழகத்தின் தேசிய நூலக தகவல் விஞ்ஞான நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(v) 2021 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத் தொழிற்சாலை திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(vi) 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை தேசிய புலமைச் சொத்து அலுவலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள் மற்றும் கணக்குகள்
(vii) அரசாங்க பொறுப்பு முயற்சிகள் குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் தென்னை வளர்ச்சி ஆணையம், தென்னை சாகுபடி வாரியம் மற்றும் தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 120(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களுக்கு பதிலாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ ஜயந்த கெட்டகொட - மூன்று மனுக்கள்
(ii) கௌரவ ஷான் விஜயலால் த சில்வா - இரண்டு மனுக்கள்
(iii) கௌரவ உபுல் மஹேந்திர ராஜபக்ஷ
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாச
கடற்றொழில் துறையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 5 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் கட்டளை
(ii) உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை
(iii) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள்
(iv) இலங்கையில் வணிக தொழில்முயற்சிகளை இலகுபடுத்தும் சுட்டெண்ணின் (Ease of Doing Business Index) பெறுமானத்தை அதிகரிப்பது தொடர்பில் எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்களையும் சிரமங்களையும் ஆய்வு செய்வதற்கும் அது தொடர்பில் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவை நியமிப்பதற்கான தீர்மானம்
அதனையடுத்து, 1608 மணியளவில் பாராளுமன்றமானது 2022 ஒக்டோபர் 05ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






