2022 ஒக்டோபர் 03ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2022-10-03 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்
B : உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்
C : அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
D : அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
E : சட்டவாக்க நிலையியற் குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் ஆண்டறிக்கை
(ii) 2012, 2013, 2014, 2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளுக்கான தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் ஆண்டறிக்கைகள்
(iii) 2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளுக்கான சமுத்திர பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கைகள்
(iv) 2021 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(v) 2018 ஆம் ஆண்டுக்கான இலங்கை போக்குவரத்து சபையின் ஆண்டறிக்கை
(vi) 2020 ஆம் ஆண்டுக்கான தி அஸோசியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடெட்டின் வருடாந்த அறிக்கை
(vii) 2020 ஆம் ஆண்டுக்கான நீர் வளங்கள் சபையின் வருடாந்த அறிக்கை
(viii) 2021 ஆம் ஆண்டுக்கான மருந்துகள் உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ix) 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள் மற்றும் கணக்கறிக்கைகள்
(x) 2020 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட லங்கா மின்சார (தனியார்) கம்பனியின் வருடாந்த அறிக்கை
(xi) 2005 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க திருத்தப்பட்டவாறான சட்டத்தின் 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் 2அ பிரிவின் கீழ், பெறுமதி சேர் தொடர்பாக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் விதிக்கப்பட்டு 2022 மே 31 ஆம் திகதிய 2282/26 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xii) காலத்திற்குக் காலம் திருத்தப்பட்டவாறான (52 ஆம் அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின், 22(1) ஆம் பிரிவின் கீழ் போத்தலில் இடப்பட்ட கள்ளின் மீதான மதுவரி தொடர்பில் நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2022 ஏப்ரல் 29 ஆம் திகதிய 2277/62 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல்
(மதுவரி அறிவித்தல் இலக்கம் 03/2022)
(xiii) காலத்திற்குக் காலம் திருத்தப்பட்டவாறான (52 ஆம் அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின், 22 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 32 ஆம் பிரிவின் கீழ் எத்தைல் மதுசாரத்திற்கான மதுவரி தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் விதிக்கப்பட்டு, 2022 யூன் 08 ஆம் திகதிய 2283/28 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல்
(மதுவரி அறிவித்தல் இலக்கம் 04/2022)
(xiv) 2003 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 2(1) ஆம் பிரிவின் கீழ் புறப்படுகை அறவீடு தொடர்பில், நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2022 மார்ச் 27 ஆம் திகதிய 2272/53 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன்
(ii) கௌரவ சந்திம வீரக்கொடி
(iii) கௌரவ டப்ளியூ.எச்.எம். தர்மசேன
(iv) கௌரவ எம். டப்ளியு. டீ. சஹன் பிரதீப் விதான
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
(113 ஆம் அத்தியாயமான) கண்டிய திருமண, மணநீக்கச் சட்டத்தைத் திருத்துவதற்காக
“கண்டிய திருமண, மணநீக்கம் (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்கள் பிரேரித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
தேசியப் பேரவையை ஸ்தாபிப்பதற்கான தீர்மானம் மீதான திருத்தம் (இன்றைய ஒழுங்குப்பத்திரத்தில் 1ஆம் விடயமாகக் காணப்படுவது)
சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1500 மணியளவில் பாராளுமன்றமானது 2022 ஒக்டோபர் 04ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






