2022 செப்டெம்பர் 23ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2022-09-23 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சனாதிபதியின் செய்திகள்
A : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்)
சபாநாயகரின் அறிவித்தல்கள்
B : தேசியப் பேரவையில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
C : ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவின் விசேட கூட்டம்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
A.
(i) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -
• 2019 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஐந்தாவது தொகுதியின் IX ஆம் பகுதியையும் ;
• 2020 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஐந்தாவது தொகுதியின் VIII ஆம் பகுதியையும் மற்றும் ஆறாவது தொகுதியின் XVI, XVII, XVIII, XIX மற்றும் XX பகுதிகளையும்; மற்றும்
• 2021 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் II மற்றும் III ஆம் பகுதிகளையும், நான்காவது தொகுதியின் IV மற்றும் V ஆம் பகுதி
(ii) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் எட்டாவது தொகுதியின் அரச நிறுவனங்களிற்கான கட்டிடத் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்தல் மற்றும் அவற்றின் பயன்பாடு தொடர்பான செயலாற்றுகை அறிக்கையின் — X ஆம் பகுதி
B.
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம், தேசிய கணக்காய்வு அலுவலகத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ள,
• அரச வங்கிகள் தொடர்பாக 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 14 ஆவது பிரிவின் பிரகாரம், கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கையின் பதினோராவது தொகுதியின் 02 ஆம் பகுதி; மற்றும்
• பொதுக் கம்பனிகள் தொடர்பாக 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 14 ஆவது பிரிவின் பிரகாரம், கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கையின் பதினோராவது தொகுதியின் 09 ஆம் பகுதி
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2016, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் (ICTA) ஆண்டறிக்கைகள்
(ii) 2021 ஆம் ஆண்டுக்கான ரணவிரு சேவா அதிகாரசபையின் ஆண்டறிக்கை
(iii) 2021 ஆம் ஆண்டுக்கான கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iv) 2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் மேலாண்மை நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(v) 2018 ஆம் ஆண்டுக்கான சிரம வாசனா நிதியத்தின் ஆண்டறிக்கை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ அஜித் ராஜபக்ஷ
(ii) கௌரவ வாசுதேவ நாணாயக்கார
(iii) கௌரவ கே. சுஜித் சஞ்ஜய பெரேரா
(iv) கௌரவ (கலாநிதி) மேஜர் பிரதீப் உந்துகொட
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
புனர்வாழ்வுப் பணியகம் என அழைக்கப்படவேண்டியதும் அறியப்படவேண்டியதுமான பணியகமொன்றைத் தாபிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும்; அதன் தத்துவங்கள், கடமைகள் மற்றும் பணிகளை ஒழுங்குபடுத்துவதற்கும் அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்காக
“புனர்வாழ்வுப் பணியகம்”
எனும் சட்டமூலத்தினை கௌரவ அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அவர்கள் பிரேரித்தார்.
அனுதாபப் பிரேரணைகள்
(i) II ஆம் எலிசபெத் மகாராணி அவர்களின் மறைவு மீதான அனுதாபப் பிரேரணை தொடர்பாக பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டது.
(ii) ஒன்பதாவது பாராளுமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினர் காலஞ்சென்ற கௌரவ அமரகீர்த்தி அதுகோரள அவர்கள் மீதான ஒத்திவைக்கப்பட்ட அனுதாபப் பிரேரணை தொடரப்பட்டு முடிவுறுத்தப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
தேசியப் பேரவையை ஸ்தாபிப்பதற்கான தீர்மானம் மீதான திருத்தம் (இன்றைய ஒழுங்குப்பத்திரத்தில் 1ஆம் விடயமாகக் காணப்படும்)
சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1251 மணியளவில் பாராளுமன்றமானது 2022 ஒக்டோபர் 03ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






