2022 செப்டெம்பர் 21ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2022-09-21 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்
B : ஒன்பதாவது பாராளுமன்றத்தின் சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தை மறுசீரமைப்பதற்கான கூட்டம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2021 ஆம் ஆண்டுக்கான இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ii) 2019 ஆம் ஆண்டுக்கான இலங்கைக் காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கையும் மற்றும் கணக்குகளும்
(iii) 2021 ஆம் ஆண்டுக்கான கட்டிடத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iv) 2019 ஆம் ஆண்டுக்கான நீர் வளங்கள் சபையின் வருடாந்த அறிக்கை
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
புகையிரத சேவைகளின் முன்னேற்றம் தொடர்பாக கூற்றொன்றினை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன அவர்கள் முன்வைத்தார்.
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
(i) கெளரவ சந்திம வீரக்கொடி அவர்களுக்கு “டாக்டர் சமன் வீரசிங்க மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
(ii) கெளரவ லலித் எல்லாவல அவர்களுக்கு “பவித்ரா வன்னியாராச்சி சகுர்த மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஒத்திவைப்புப் பிரேரணை
“அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்க வேண்டியதன் அவசியம்” பற்றிய ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2022 செப்டெம்பர் 22ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






