இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2022 செப்டெம்பர் 20ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2022-09-20

பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமான கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்  
B : ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரிற்காக தவிசாளர் குழாமில் உள்ளடக்கப்படவுள்ள உறுப்பினர்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2018 ஆம் ஆண்டுக்கான அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வருடாந்த அறிக்கை
(ii)    2021 ஆம் ஆண்டுக்கான அமைச்சரவை அலுவலகத்தின் செயலாற்றுகை அறிக்கை
(iii)    2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளுக்கான வாழ்க்கைத் தொழில்சார் தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கைகள்
(iv)    2020 ஆம் ஆண்டுக்கான கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை
(v)    2020 ஆம் ஆண்டுக்கான தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிலையத்தின்  ஆண்டறிக்கையும் கணக்குகளும்
(vi)    2018 ஆம் ஆண்டுக்கான இலங்கை மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(vii)    2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(viii)    2020 ஆம் ஆண்டுக்கான ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி, பயிற்சி நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
(ix)    2020/21 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட பொஸ்பேட் நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(x)    2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(xi)    2020 ஆம் ஆண்டுக்கான சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் மின்னுற்பத்தி கருத்திட்ட இராஜாங்க அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xii)    2018 ஆம் ஆண்டுக்கான கூட்டுறவு மொத்த விற்பனை தாபனத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்

(xiii) 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் 3(4) ஆம் பிரிவின்  கீழ் எச்சீஎல் டெக்னொலஜீஸ் லங்கா (பிறைவேட்) லிமிட்டட் தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2022 ஆகஸ்ட் 03 ஆம் திகதிய 2291/25 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xiv)    1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின்  கீழ் உற்பத்தி வரி தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2022 யூலை 27 ஆம் திகதிய 2290/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ லசந்த அலகியவன்ன                    
(ii)    கௌரவ எஸ். பீ. திசாநாயக்க                    
(iii)    கௌரவ அஜித் மான்னப்பெரும                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாச

புகை பிடித்தல் மற்றும் மதுபானத்தை கட்டுப்படுத்துதல்

மேற்சொன்ன வினாவிற்கு நிதி இராஜாங்க அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியம்பலாபிடிய அவர்கள் பதிலளித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

தேசியப் பேரவையை ஸ்தாபிப்பதற்கான தீர்மானம் (இன்றைய ஒழுங்குப்பத்திரத்தில் 1ஆம் விடயமாகக் காணப்படுவது)

சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1651 மணியளவில் பாராளுமன்றமானது 2022 செப்டெம்பர் 21ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom